Advertisment
Presenting Partner
Desktop GIF

'மறக்குமா நெஞ்சம்; இனி மறக்கவே முடியாது': ரகுமான் நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்கள் குமுறல்

ரகுமானின் இசை நிகழ்ச்சிக்கு 5 ஆயிரம், 10 ஆயிரம் என பணம் கொடுத்து பாஸ் வாங்கியவர்களுக்கு கூட உட்கார கூட இடம் கிடைக்கவில்லை

author-image
WebDesk
New Update
 AR Rahman Concert Chennai

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான ஏ.சி.டி.சி மன்னிப்பு கோரியுள்ளது.

AR Rahman Concert Chennai: இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். இவரது "மறக்குமா நெஞ்சம்" இசை நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை அடுத்த உத்தண்டியில் நடந்தது. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி இந்த இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுருந்த நிலையில், அன்றைய தினம் கனமழை பெய்ததால் நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டது.

Advertisment

நெரிசல் 

இந்நிலையில்,  ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நேற்று திட்டமிட்டபடி சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஆதித்யராம் கிரவுண்டில் இரவு 7:10 மணிக்கு தொடங்கியது. மிகவும் பிரம்மாண்ட அரங்கேறிய இசை நிகழ்ச்சியைக் காண ரசிகர்கள் ஆவலோடு படையெடுத்து வந்தனர். இதனால், ஈ.சி.ஆர் - ஓ.எம்.ஆர் சாலைகள் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையும் கடந்து சென்ற ரசிகர்களில் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பினர். 

நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குள்ளே சென்ற ரசிகர்களில் சிலர் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்துள்ளனர். குழந்தைகள் தொலைந்து போய் உள்ளனர்.  வி.ஐ.பி பாஸ் 25 ஆயிரம், 50 ஆயிரம் என பல ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 5 ஆயிரம், 10 ஆயிரம் என பணம் கொடுத்து பாஸ் வாங்கியவர்களுக்கு கூட உட்கார கூட இடம் கிடைக்கவில்லையாம். இதனால் ஆதங்கத்துடன் வீட்டுக்கு திரும்பிச் சென்றவர்கள் ஏ.ஆர்.ரகுமானையும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஏ.சி.டி.சி (ACTC Events) நிறுவனத்தையும் திட்டித்தீர்த்து வருகின்றனர். 

குமுறல் 

இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி மற்றும் அதனால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்டவைகளை பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதனால், #ARRahmanConcert, #ARRahman போன்ற டேக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகிறது. பெண்கள்  பலரும் பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கிய தங்களின் உயிர் போயிருக்கும் என கொதித்து பேசியுள்ளனர். 

ஏ.ஆர். ரகுமானும், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஏ.சி.டி.சி நிறுவனமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ஆசையைக் காட்டி மக்களிடம் இருந்து தாறுமாறாக பணத்தை வசூலித்து மோசடி செய்த ஏ.சி.டி.சி நிறுவனம் பணத்தை ரசிகர்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

ஏ.சி.டி.சி என்றாலே மக்கள் அலறுகிறார்கள், ஏ.ஆர். ரகுமானின் புகழுக்கு களங்கம் விளைத்துவிட்டார்கள் என்றும் ரசிகர்கள் கூறியுள்ளார்கள். ரகுமான் இசை நிகழ்ச்சி குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளனர். நிகழ்ச்சிக்கு சென்ற ரசிகர்கள் குமுறும் வீடியோவும் இணையத்தில் வைரலாகிறது வருகிறது.

மன்னிப்பு  

இதற்கிடையில், ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான ஏ.சி.டி.சி மன்னிப்பு கோரியுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனதற்கு முழு பொறுப்பையும் ஏ.சி.டி.சி நிறுவனமே ஏற்பதாகவும், ரசிகர்களின் அமோக ஆதரவால், ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றதாகவும் X தளத்தில் பதிவு செய்துள்ளது. 

நோட்டீஸ் 

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் அளித்துள்ள பெட்டியில், போக்குவரத்து நெரிசல் தொடர்பாக விசாரணை நடத்த தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜூக்கு  உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், டிக்கெட் வழங்கும் நடைமுறை என்ன என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெளிவாக விளக்க வேண்டும். விளக்கம் கேட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Chennai Ar Rahman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment