Advertisment

அயலான் படத்தில் டான்ஸ் புயலான இசைப் புயல்; சிவகார்த்திகேயன் உடன் ஏ.ஆர். ரஹ்மான் நடனம்!

அயலான் படத்தின் 4-வது சிங்கிள் டிராக்கிள் இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் டான்ஸ் புயலாகி சிவகார்த்திகேயன் உடன் நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
AR Rahman 1

ஏ.ஆர். ரஹ்மான் டான்ஸ்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அயலான் படத்தின் 4-வது சிங்கிள் டிராக்கிள் இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் டான்ஸ் புயலாகி சிவகார்த்திகேயன் உடன் நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment

ஆஸ்கார், கிராமி, பாஃப்டா, கோல்டன் குளோப் விருதுகளை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையின் இனிமையை, அழகான இசையை உலகமே அறியும். ஆனால், அவருடைய அறியப்படாத நடனம் ஆடும் திறன் அயலான் படத்தில் வெளிப்பட்டுள்ளது.

இயக்குனர் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வேற்றுக் கிரக வாசி பூமிக்கு வருகிற பின்னணியில் கதைக்களம் அமைந்துள்ளதால் மேலும் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.

அண்மையில், வெளியான அயலான் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து வெளியான அயலான் சிங்கிள் டிராக்குகளும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

ரசிகர்களால் பெரிய அளவில் எதிர்பர்க்கப்படும் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் ஜனவரி 24-ம் தேதி வெளியாகும் என்று கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ், பாண்டோம் எஃப்.எக்ஸ் ஸ்டுடியோஸ் வெளியிட திட்டமிட்டுள்ளன.

அயலான் படத்துகான புரோமோஷன் வேலைகளும் நடந்து வரும் நிலையில், அயலான் படத்தின் 4-வது சிங்கிள் டிராக் ‘மாஞ்சா நீ’ வெளியாகி உள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இதற்கு ஏ.ஆர். ரஹ்மானின் இசை மட்டுமல்ல, ஏ.ஆர். ரஹ்மானின் நடனமும் காரணம். ஆம், இந்த சிங்கிள் டிராக்கில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் சிவகார்த்திகேயனுடன் டான்ஸ் ஆடியுள்ளார். 

‘மாஞ்சா நீ’ சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து ஸ்டெப் போட்டு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் டான்ஸ் புயலாக மாறி நடனம் ஆடியிருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மானின் இசையை மட்டுமே கேட்டு ரசித்து வந்த ரசிகர்கள் அவருடைய நடனத்தைப் பார்த்து அசந்து போய் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ar Rahman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment