பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு இருவரும் விவகாரத்து செய்வதாக அறிவித்தனர். 29 ஆண்டுகால திருமண உறவில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
ஏ.ஆர்.ரகுமான் விவகாரத்து அறிவித்த சில மணிநேரத்தில் அவரது இசைக்குழுவில் கிடார் இசைக்கலைஞராக பணியாற்றிய பெண் மோகினி டேவும் அவரது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதையடுத்து இருவரையும் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வந்தன.
தனக்கு எதிரான தவறான செய்திகளை யூடியூபர்கள் உடனடியாக நீக்குமாறு ரகுமான் நோட்டீஸ் வழங்கினார். இந்தநிலையில், ஏ.ஆர்.ரகுமான் தனக்கு தந்தை போன்றவர் என்று கூறி சர்ச்சைகளுக்கு மோகினி டே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோவில், ‘எனக்கு பல ரோல் மாடல்கள் உள்ளனர். எனது வளர்ச்சியில் அவர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் எனக்கு தந்தையைப் போன்றவர். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
அவரது மகளுக்கு எனது வயதுதான் இருக்கும் என்று நினைக்கிறேன். என் மீதும் ஏ.ஆர்.ரகுமான் அன்பும் மரியாதையும் வைத்துள்ளார். அவரது இசைக்குழுவில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறேன். என்னையும் அவரையும் இணைத்து வதந்திகள் வந்துள்ளன.
அவை உண்மை கிடையாது. இந்த வதந்திகள் காயப்படுத்துகின்றன. எனவே கனிவாக நடந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“