/tamil-ie/media/media_files/uploads/2023/03/ar-rahman.jpg)
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ஆஸ்கார் விருது பெற்ற இரவை நினைவு கூர்ந்தார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குனர் டேனி பாய்லின் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றதன் மூலம் சரித்திரம் படைத்தார். ஆனால், ஆஸ்கர் விழாவில் அவர் பேசியது இந்தியாவில் உள்ள சிலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. இந்தநிலையில், ரஹ்மான் தனது வார்த்தைகளின் அர்த்தத்தை ஒரு புதிய வீடியோவில் தெளிவுபடுத்தியுள்ளார்.
அந்த வீடியோவை ஆஸ்கர் அகாடமி ட்விட்டரில் பகிர்ந்துள்ளது, மேலும் ரஹ்மான் தனது வெற்றி அனுபவத்தை 2009-ல் மீண்டும் நினைவுக் கூர்ந்ததைக் குறிப்பிட்டார். ஆஸ்கர் மேடையில் முதல்முறையாக தனது பெயரை அழைத்தபோது, நன்றியை தெரிவித்துவிட்டு, தமிழில் ஒரு வரியை பேசியதை நினைவுகூர்ந்தார், அது “எல்லா புகழும் இறைவனுக்கே."
இதையும் படியுங்கள்: பெண்களை பயமுறுத்தினாரா பிரபுதேவா? “பஹிரா” படத்தின் விமர்சனம்
"ஜெய் ஹோ" பாடலுக்காக பாடாலாசிரியர் குல்சாருடன் பகிர்ந்து கொண்ட விருதைப் பெற, அவர் இரண்டாவது முறையாக மேடைக்கு அழைக்கப்பட்டார். அது குறித்து தற்போதைய வீடியோவில், “இரண்டாவது முறையாக சிறந்த பாடலுக்கான எனது பெயரை அறிவித்தபோது, படத்தின் சாராம்சம் நற்சிந்தனையும் நம்பிக்கையும் தான் என்று என் உரையில் கூறியிருந்தேன், ஏனென்றால் உலகம் பொருளாதார மந்தநிலையில் சென்றுக் கொண்டிருந்தது மற்றும் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தைப் பார்க்கும் எவரும் உயர்வாக உணரும் வகையில் படமாக்கபட்டுள்ளது,” என்று கூறினார்.
A.R. Rahman (@arrahman) reflects on winning the Oscar for Best Original Song and Score for ‘Slumdog Millionaire’ at the 81st #Oscars. pic.twitter.com/Hry5GmTBzK
— The Academy (@TheAcademy) March 2, 2023
ரஹ்மான் தனது உரையில், "என் வாழ்நாள் முழுவதும், வெறுப்பு மற்றும் அன்பு இரண்டுக்கும் இடையில் தேர்வு செய்ய வேண்டி இருந்தது. நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன், நான் இங்கே இருக்கிறேன். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்." என்று கூறினார். அந்த தருணத்தை நினைவு கூர்ந்த ரஹ்மான் தற்போதைய வீடியோவில், “சிலர் சில மதங்கள் மற்றும் அது போன்ற்றுடன் பொருத்தி அந்த அறிக்கையை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர், இது உண்மையல்ல. உலகில் உள்ள ஒவ்வொரு கலைஞரின் நிலையும் இதுதான், அதுதான் அவர்களை கலைஞராக ஆக்குகிறது. அவர்கள் கொடுக்க விரும்புகிறார்கள், அன்பு என்பது கொடுப்பது, எடுப்பது அல்ல,” என்று கூறினார்.
வரவிருக்கும் ஆஸ்கர் அகாடமி விருதுகளில் இந்தியா மீண்டும் ஒருமுறை போட்டியில் உள்ளது. திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் பிரபலமான பாடலான “நாட்டு நாட்டு” என்ற பாடல் சிறந்த அசல் பாடல் பிரிவில் உள்ளது, ஆவணப்படமான தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் சிறந்த ஆவணப்பட குறும்படப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது, மேலும் இயக்குனர் ஷௌனக் சென்னின் ஆல் தட் ப்ரீத்ஸ் சிறப்பு வகைப் பிரிவில் சிறந்த ஆவணப்படமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.