scorecardresearch

நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை : ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது என்ன?

பாகுபலி என்ற படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ரத்தம் ரணம் ரவுத்திரம் (ஆர்ஆர்ஆர்).

நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை : ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது என்ன?
A.R.Rahman Nattu Nattu Song

ராம்சரன் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறித்து இசையமைப்பளர் ஏ,ஆர்.ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.

பாகுபலி என்ற படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ரத்தம் ரணம் ரவுத்திரம் (ஆர்ஆர்ஆர்). இந்தியா சுதந்திரத்திற்கு முன்பு கதை நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரன், அஜய்தேவகன், ஆலியா பட் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்த இந்த படத்தில் ராம்சரன், ஜூனியர் என.டி.ஆர் இருவரும் இணைந்து நடனமாடிய நாட்டு நாட்டு பாடல் பட்டிதொட்டி எங்கிலும் பட்டையை கிளப்பியது. குறிப்பாக இந்த பாடலின் நடனம் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டு ரசிகர்களையும் கவர்ந்தது.

இந்நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருது பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்த பாடல் கண்டிப்பாக ஆஸ்கார் வாங்க வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்தி வரும் நிலையில், இந்தியா சார்பில் ஏற்கனவே இரண்டு ஆஸ்கார் விருது வாங்கியுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஹ்மான், ஆர்.ஆர்.ஆர் குழு ஆஸ்கார் விருதை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தியத் திரையுலகம் வெகு காலத்திற்கு முன்பே இத்தகைய சர்வதேச அங்கீகாரத்தை பெறத் தொடங்கியிருக்க வேண்டும் “இது (இந்தியா பரிந்துரை பெறுவது) பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் 12 ஆண்டுகள் தாமதாகிவிட்டது. இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று நடக்க வேண்டும்.

ஏனென்றால் நாம் 1.3 பில்லியன் மக்களைக் கொண்ட நாடு மற்றும் திரைப்படத் தயாரிப்பின் ஒவ்வொரு அம்சத்திலும் அற்புதமான மேதைகள் இந்தியாவில் உள்ளனர். பெரும்பாலான திரைப்படங்கள் ஆஸ்கார் போட்டியில் நுழைவதில்லை. அந்த நிலையை மாற்ற வேண்டும். உங்கள் படம் யாருக்கும் தெரியாவிட்டால், அதற்கு எப்படி வாக்களிப்பார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து மும்பையில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவில் ரஹ்மான் செய்தியாளர்களிடம் பேசுகையில், அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். “நாட்டு நாட்டு” சிறந்த பாடல் பிரிவில் “அப்லாஸ்” (டெல் இட் லைக் எ உமன்), “ஹோல்ட் மை ஹேண்ட்” (டாப் கன் மேவரிக்), “லிஃப்ட் மீ அப்” (பிளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவர்) , மற்றும் “திஸ் ஈஸ் மை லைஃப்” (எவிரித்திங் எவிரிவேர் ஆல் அட் ஒன்ஸ்) ஆகிய நான்கு பாடல்களுடன் போட்டியிடுகிறது என்று கூறியுள்ளார்.

95வது அஸ்குர்ா விருதுகளுக்கான பரிந்துரைகளின் பட்டியலை நடிகர்கள் ரிஸ் அகமது மற்றும் அலிசன் வில்லியம்ஸ் அறிவித்துள்ளனர். ஸ்லம்டாக் மில்லியனர் (2008) திரைப்படத்தில் ஒலி வடிவமைப்பிற்காக ஆஸ்கார் விருதை வென்ற ரெசூல் பூக்குட்டி, இது இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் தருணம் என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதில் திரையுலக பிரபலங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் இடம் பேசிய எம்.எம்.கீரவாணியின் நண்பரான பாடகர் மனோ,  “நானும் கீரவாணியும் இணைந்து சின்னத்திரை இசையமைப்பாளர் சக்ரவர்த்தியின் கீழ் பணிபுரிந்தோம், அப்போதே அவர் தெலுங்கு திரையுலகில் ட்ரெண்ட்செட்டராக மாறி பெரிய சாதனைகளை செய்வார் என்பது எங்களுக்குத் தெரியும், அது இப்போது நிஜமாகியுள்ளது. நாட்டு நாட்டு நமக்கு ஆஸ்கார் விருதை வெல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

என் அன்பான நண்பருக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் மிகவும் மென்மையான குணம் கொண்டவர், அவரைப் பற்றி எந்தக் கருத்தும் இல்லை. அவரது மெல்லிசைகளைப் போன்றவர். இத்தனை வருட கடின உழைப்புக்குப் பிறகு கீரவாணி அதற்குத் தகுதியானவர்” என்பதை நிரூபித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Ar rahman reacts to rrr song naatu naatu getting oscar nomination

Best of Express