Advertisment

அமெரிக்காவில் ஒரு வாரம் காத்திருப்பு; மைக்கேல் ஜாக்சனை சந்திக்க மறுத்த ஏ.ஆர். ரஹ்மான்

ஏ.ஆர். ரஹ்மான் “2009ல் லாஸ் ஏஞ்சல்ஸில் நான் அவரை சந்தித்தேன். நான் அவரை சந்திக்க வாய்ப்பை எதிர்நோக்கி இருந்தேன். இது தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பினோம். ஆனால் பதில் வரவில்லை” என்றார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
AR Rahman recalls declining invitation to meet Michael Jackson

மைக்கேல் ஜாக்சனைச் சந்திப்பதற்கான அழைப்பை ஒரு வாரமாகப் பிடித்துக் கொண்டு நிராகரித்ததை நினைவு கூர்ந்தார் ஏஆர் ரஹ்மான்.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான், லாஸ் ஏஞ்சல்ஸில் மைக்கேல் ஜாக்சனை சந்தித்ததை நினைவு கூர்ந்தார். சமீபத்தில் கோலாலம்பூரில் நடந்த ஒரு நிகழ்வில், “பாப் மன்னர் மைக்கேல் ஜாக்சனை அவரது வீட்டில் சந்தித்தாகவும், இரண்டு மணி நேரம் அவருடன் உரையாடியதாகவும்” ஏ.ஆர். ரஹ்மான் கூறினார்.

இது குறித்து பேசிய ஏ.ஆர். ரஹ்மான் “2009ல் நான் லாஸ் ஏஞ்சல்ஸில் நான் அவரை சந்தித்தேன். நான் அவரை சந்திக்க வாய்ப்பை எதிர்நோக்கி இருந்தேன். இது தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பினோம். ஆனால் பதில் வரவில்லை” என்றார்.

தொடர்ந்து, “நான் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டேன். அப்போது ஒரு மின்னஞ்சல் வந்தது. மைக்கேல் ஜாக்சன் சந்திக்க விரும்புவதாக கூறினார்கள். நான் அப்போது சந்திக்க மறுத்துவிட்டேன். ஆஸ்கார் வென்றால் அவரை சந்திப்பேன்; இல்லையெனில் சந்திக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

இந்நிலையில் ஆஸ்கார் வென்றேன். மாலை 6.30 மணிக்கு அந்தி சாயும் நேரத்தில் அவரை சந்தித்தேன்” என்றார்.

மேலும், மைக்கேல் ஜாக்சனுடன் பேசியதை நினைவுக் கூர்ந்த ரஹ்மான், “உலக அமைதி குறித்து மைக்கேல் ஜாக்சன் பேசினார்” என்றார். தொடர்ந்து, “அவர் என்னை தனது குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தினார். நான் இந்தியாவுக்குத் திரும்புவதற்காகக் காத்திருந்தேன். அது மறக்க முடியாதது” என்றார். இந்தியா திரும்பியதும், ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தில் பணிபுரியத் தொடங்கினேன்.

அப்போது எந்திரன் படத்தில் அவருடன் சேர்ந்து ஒத்துழைக்க இருந்தோம். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் 2009ல் இறந்துவிட்டார். அப்போது அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்” என்றார்.

Advertisment

ஆங்கிலத்தில் வாசிக்க : AR Rahman recalls declining invitation to meet Michael Jackson after being kept on the hook for a week: ‘I don’t want to meet him…’

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Ar Rahman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment