Advertisment

பாரத் கோயலின் இசையை பாராட்டிய ஏ.ஆர். ரஹ்மான்: வீடியோ வைரல்

பாரத் கோயலின் 'அகர் தும் சத் ஹோ' இசைப்பாடல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து, சமூக வலைதளத்தில் பாராட்டை பெற்றுள்ளது. ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான் இந்த வீடியோவை ரீ-போஸ்ட் செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
AR Rahman reposts Bharat Goels viral rendition of Agar Tum Sath Ho fans say kaise kar lete ho

ஏ.ஆர். ரஹ்மான், பாரத் கோயல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இசையமைப்பாளர் பாரத் கோயல், சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம். இவர் சமீபத்தில் பாடல் ஒன்றை, புல்லாங்குழல் இசையால் மீட்டிருந்தார். இது பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இதற்குப் பலரும் பாராட்டுகளை தெரிவித்து இருந்தனர்.

நடிகர் ரன்வீர் கபூர், விராத் கோலி என பலரையும் இந்த இசை சென்றடைந்து இருந்தது. இந்த நிலையில் தற்போது ஏ.ஆர். ரஹ்மான் பாடலுக்கு தம்ஸ்அப் செய்து பாராட்டியுள்ளார்.

Advertisment

மேலும் அதனை ரீ-போஸ்ட் செய்துள்ளார். இந்த நிலையில் பாடகர் பாடகி ஹர்ஷ்தீப் கவுர், “ஆஹா!! எப்போதும் போல் அற்புதம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பலரும் இதனை பாராட்டியுள்ளனர். இது தொடர்பாக ஏ.ஐ.என்.ஐ-யிடம் பேசிய பாரத் கோயல், “ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனது பணிக்கான அவரது சரிபார்ப்பு உண்மையிலேயே தாழ்மையானது மற்றும் ஊக்கமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த பாடல் ரசிகர்களின் விருப்பமாக இருந்து வருகிறது. இந்தப் பாடலில் ரன்பீர் கபூர் மற்றும் தீபிகா படுகோன் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலத்தில் வாசிக்க : AR Rahman reposts Bharat Goel’s viral rendition of ‘Agar Tum Sath Ho’, fans say ‘kaise kar lete ho’

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Ar Rahman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment