ஏ.ஆர்.ரகுமானும் சாய்ரா பானுவும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக அறிவித்ததிலிருந்து, இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
இப்போது, தம்பதியினரின் விவாகரத்து வழக்கறிஞர் வந்தனா ஷா, தம்பதிகளிடையே சமரசத்திற்கான வாய்ப்பு மற்றும் 3 குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி பேசியுள்ளார்.
விக்கி லால்வானியின் யூடியூப் சேனலுக்குப் பேட்டி அளித்த வந்தனா கூறுகையில், ரகுமான் மற்றும் சாய்ராவின் குழந்தைகள் யாருடன் இருப்பார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "அது இன்னும் முடிவு செய்யப்படவில்லை... அவர்களில் சிலர் பெரியவர்கள் ஆகிவிட்டனர். அதனால் அவர்கள் யாருடன் இருக்க வேண்டும் என்பதை அவர்கள் சுதந்திரமாக தேர்வு செய்யலாம் என்றார்"
இந்த வழக்கில் ஒரு பெரிய ஜீவனாம்சம் வழங்கப்படுமா என்றும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு வந்தனா அதைப் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறினார், அதே நேரம் சாய்ரா பானு பண ஆசை கொண்ட பெண் அல்ல என்று கூறினார்.
சுவாரஸ்யமாக, ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் சாய்ரா பானுவுக்கும் இடையே சமரசத்தை வந்தனா ஷா நிராகரிக்கவில்லை. அவர் கூறுகையில், “நல்லிணக்கம் சாத்தியமில்லை என்று நான் ஒருஇடத்திலும் சொல்லவில்லை. நான் ஒரு நித்திய நம்பிக்கையாளர், நான் எப்போதும் காதல் பற்றி பேசுகிறேன். கூட்டு அறிக்கை மிகவும் தெளிவாக உள்ளது.
இது வலி மற்றும் பிரிவினை பற்றி பேசுகிறது. இது ஒரு நீண்ட திருமணம் மற்றும் இந்த முடிவை எடுப்பதற்கு நிறைய யோசித்திருப்பார்கள், ஆனால் சமரசம் சாத்தியமில்லை என்று நான் எங்கும் கூறவில்லை" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“