ஏ.ஆர்.ரஹ்மான் மதம் மாறியதால் தன்னை ‘மிகவும் அமைதி’ ஆக்கியது என்றும் தனது நிராகரிக்கப்பட்ட இசை சூஃபி ஞானியின் ஆசீர்வாதத்திற்குப் பிறகு எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதையும் நினைவுகூர்ந்தார்.
சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அளித்துள்ள ஒரு புதிய நேர்காணலில், அவர் ஒரு புதிய நம்பிக்கையைத் தழுவிய நேரம் மற்றும் அது தனது வாழ்க்கையை எவ்வாறு மாற்றியது என்பதைப் பற்றி மனம் திறந்துள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான் 1980-களில் ஒரு இண்டிபெண்டெண்ட் இசையமைப்பாளராக தனது கரியரைத் தொடங்கும் போது சூஃபித்துவத்தால் பக்கம் ஈர்க்கப்பட்டார். சமீபத்திய நேர்காணலில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் புதிய மதத்தைத் தழுவிய உடனேயே, அவரது தொழில் வாழ்க்கையில் விஷயங்கள் மாற ஆரம்பித்தன என்று கூறினார். ஏ.ஆர். ரஹ்மான், மிகவும் அமைதியாக இருப்பதைக் கண்டதாகவும், புதிய நம்பிக்கையைத் தழுவிய பிறகு அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பல விஷயங்கள் ஒருவிதமாகத் திறக்கப்பட்டதாக உணர்ந்ததாகவும் கூறினார்.
தி கிளென் கோல்ட் அறக்கட்டளை உடனான நேர்காணலில், ஏ.ஆர். ரஹ்மான் தனது தந்தை தனது கடைசி நாட்களில் போராடியபோது பல ஆன்மீக குணப்படுத்துபவர்களை சந்தித்ததாகவும், அந்த நேரத்தில் தனது குடும்பம் ஒரு சூஃபி ஆன்மீக குணப்படுத்துபவரை சந்தித்ததாகவும், அந்த நேரத்தில், அவரது குடும்பம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவரிடம் திரும்பும் என்று கணித்ததாகவும் கூறினார்.
சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, சிங்கப்பூரில் இருந்து ஸ்டுடியோ உபகரணங்களைப் இறக்குமதி செய்தபோது, சுங்க வரித் துறையினரிடம் சிக்கியதை ஏ.ஆர். ரஹ்மான் நினைவு கூர்ந்தார். “அப்போது அவருடைய மாணவர் ஒருவர் என்னைப் பார்த்துவிட்டு அவரிடம் சென்று சொன்னார். அவரது மாணவர் சுங்கச்சாவடியில் பணிபுரிந்தார். அவர் வெளியே எடுக்க அகற்ற உதவினார். நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருந்தோம். நாங்கள் அவரிடம் திரும்பினோம்” என்று அவர் நினைவு கூர்ந்தார்.
சூஃபி தனது ஸ்டுடியோவை ஆசீர்வதித்ததாகவும், ஏ.ஆர். ரஹ்மான் தனது போதனைகள் தனது வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட வகையான அமைதியைக் கொண்டு வந்ததாக கூறினார். “நீங்கள் இந்த மதத்திற்கு மாற வேண்டும் என்று யாரும் எங்களிடம் கூறவில்லை. நான் இன்னும் மிகவும் அமைதியாக இருந்தேன். ஏதோ ஒரு விசேஷம் போல் உணர்ந்தேன். நிராகரிக்கப்பட்ட இசைகள் பிரார்த்தனைக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டது.”என்று அவர் பகிர்ந்து கொண்டார்.
இந்த நிலையில் தான் ஒரு மதத்திற்கு முடிவு செய்துள்ளதாக ஏ.ஆர். ரஹ்மான் தனது தாயிடம் கூறினார். மேலும், அவர் தனது முடிவை ஒப்புக்கொண்டார் என்று ஏ.ஆர். ரஹ்மான் கூறினார்.
இது குறித்து ஏ.ஆர். ரஹ்மான் கூறுகையில், “பல விஷயங்கள் ஒருவிதமாக திறந்தது. நாங்கள் சூஃபி ஆலயங்களுக்குச் சென்று கொண்டிருந்தோம். நான் எல்லா புத்தகங்களையும் வாங்கிக் கொண்டிருந்தேன். அது சுவாரஸ்யமாக இருந்தது,” என்று நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
மதம் மாறியதால் குடும்பம் எதிர்கொள்ள வேண்டிய சமூக மாற்றங்கள் ஏதேனும் இருந்ததா என்று கேட்டதற்கு, ஏ.ஆர். ரஹ்மான், இந்தியர்கள் மக்களை மிகவும் ஏற்றுக்கொள்கிறார்கள். அவர் எந்தவிதமான பாகுபாட்டையும் எதிர்கொள்ளவில்லை என்று கூறினார். “இந்தியர்கள் மிகவும் திறந்த மனதுடைய மனிதர்கள், குறிப்பாக தெற்கில், அவர்கள் மிகவும் திறந்தவர்கள். அவர்கள் மிகவும் அரவணைப்பு மிக்கவர்கள், அவர்கள் மகிழ்ச்சியான மக்கள் எல்லோரும் வாழ வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அதுதான் நடந்துள்ளது” என்று அவர் கூறினார்.
ஏ.ஆர். ரஹ்மான், இந்தியாவில் பெரும்பாலும் இதே நிலைதான் உள்ளது என்று குறிப்பிட்டார். ஆனால், “கடந்த சில வருடங்கள் அரசியல் விஷயங்களால் விசித்திரமாக இருந்தது” என்பதை ஒப்புக்கொண்டார்.
ஏ.ஆர். ரஹ்மான் இயற்பெயர் திலீப். ஏ.ஆர். ரஹ்மான் மதம் மாற முடிவு செய்யும் வரை அவருடைய தாயார், குடும்பம் எல்லாம் இந்து மதத்தை பின்பற்றி வந்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.