பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாலிவுட்டில் குறைவான படங்களுக்கு இசையமைத்து வருவதற்கான காரணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பதர்கு முன்பு நடித்த ‘தில் பெச்சாரா’படத்தில் ஸ்வான் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
ரேடியோ மிர்ச்சியில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “நான் நல்ல திரைப்படங்களை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால். என்னை வேண்டாம் என்று சொல்ல ஒரு கும்பல் இருப்பதாக நான் நினைக்கிறேன். அந்த கும்பல் தவறான புரிதல்களால் சில தவறான வதந்திகளை பரப்புகிறது. முகேஷ் சாப்ரா என்னிடம் வந்தபோது, இரண்டு நாட்களில் அவருக்கு நான்கு பாடல்களைக் கொடுத்தேன். அவர் என்னிடம், சார், எத்தனையோ பேர் போக வேண்டாம், அவரிடம் (ஏ.ஆர்.ரஹ்மான்) செல்ல வேண்டாம் என்று சொன்னார்கள், அவர்கள் கதை கதையாகச் சொன்னார்கள்.' நான் அதைக் கேட்டு நான் உணர்ந்து கொண்டேன். ஆமாம், இப்போது ஏன் என்று எனக்கு புரிகிறது. நான் குறைவாக (இந்தி படங்களில் வேலை செய்கிறேன்) செய்கிறேன். ஏன் நல்ல திரைப்படங்கள் எனக்கு வரவில்லை. நான் டார்க் படங்களுக்கு வேலை செய்கிறேன். ஏனென்றால், அவர்கள் தீங்கு செய்கிறார்கள் என்று தெரியாமல் ஒரு கும்பல் எனக்கு எதிராக செயல்படுகிறது.” என்று கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “நான் ஏதாவது நல்ல விஷயங்களைச் செய்வேன் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அது நடப்பதைத் தடுக்கும் மற்றொரு கும்பல் உள்ளது. இது நல்லது, ஏனென்றால் நான் விதியை நம்புகிறேன், எல்லாம் கடவுளிடமிருந்து வருகிறது என்று நான் நம்புகிறேன். எனவே, நான் எனது திரைப்படங்களை எடுத்து எனது பிற விஷயங்களைச் செய்கிறேன். ஆனால், நீங்கள் அனைவரும் என்னிடம் வருவதை வரவேற்கிறேன். அழகான திரைப்படங்களை உருவாக்குங்கள், என்னிடம் வருவதை வரவேற்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
ஜான் க்ரீனின் நாவலான தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸை அடிப்படையாகக் கொண்ட தில் பெச்சாரா வெள்ளிக்கிழமை டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் திரைப்பட விமர்சகர் சுப்ரா குப்தா இந்த படத்திற்கு 2.5 நட்சத்திரங்களைக் அளித்தோடு, “தில் பெச்சாரா வெறும் ஒரு படம் மட்டுமல்ல” என்று எழுதினார். இது ஒருவருக்கான இறுதி மரியாதையும் துயரத்திலிருந்து விடுபடுவதின் சம பாகம். இதில் சுஷாந்தைப் பார்க்கிறீர்கள், படம் பின்னே செல்கிறது. நீங்கள் வெளியே வர விரும்பினால், படத்தின் ஃபிரேம் அப்படியே உறைந்து போகிறது. அவர் அங்கே இருந்தார். அவர் இபோது இங்கே இல்லை. நான் கண்ணீரைத் துடைத்தேன் என்று எழுதியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.