Advertisment

இசைப்புயல் கை வண்ணத்தில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ஆன்தம்

ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில், இந்த படம் இந்தியாவில் விரைவில் வெளியாக உள்ளது.

author-image
WebDesk
Mar 28, 2019 09:52 IST
New Update
ar-rahman scoring for avengers

ar-rahman scoring for avengers

எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று இரண்டு கைகளில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை ஏந்தியவாறு தமிழராய், இந்தியராய் உலக அரங்கில் பெருமை தேடித்தந்தவர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான்.

Advertisment

ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது..

இந்நிலையில், அதிசூர சாகச வீரர்களை கதைக்களமாக கொண்டு பல பகுதிகளாக ஹாலிவுட்டில் வெளியான படம் அவெஞ்சர்ஸ்.

இந்த படம், தற்போது இறுதி அத்தியாய படமாக Avengers : endgame உருவாகி வருகிறது.

ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில், இந்த படம் இந்தியாவில் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த படத்தில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பங்கும் உள்ளது என்பது நம்மைப்போன்ற இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஆகும்

Avengers : endgame படத்தின் anthem இசைப்பணியை ரஹ்மான் மேற்கொள்ள உள்ளார்.

Kevin Feige தயாரிப்பிலான இந்த படத்தில் Anthony மற்றும் Joe Russo முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், ஏப்ரல் 26ம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.

ஆங்கிலம், தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது..

#Tamil Cinema #A R Rahman #Hollywood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment