சமீபத்தில் இந்தியா முழுவதும் அரசியல் தலைவர்கள் முதல் சினிமா துறை வரை பல பிரபலங்கள் சிக்கியுள்ள விவகாரம் மி டூ. சினிமா துறையில் நடந்த பாலியல் குற்றச்சாட்டுகள் பலவற்றையும் பலரும் வெளிச்சத்திற்கு கொண்டு வரத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் பெயர் வைரமுத்து.
ஏ. ஆர் ரகுமானுடன் இணைந்து அதிகமாகப் பணியாற்றும் முக்கிய பிரபலங்களில் இருவர் வைரமுத்து மற்றும் சின்மயி. கவிஞர் வைரமுத்து ஏராளமான பாடல்களை ஏ. ஆர். ரகுமான் இசைக்கு எழுதியுள்ளார். அதில் பெரும்பாலான பாடல்களை சின்மயி பாடியுள்ளார்.
மி டூ விவகாரம் குறித்து இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் கருத்து
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளதாக சின்மயி குற்றச்சாட்டு முன்வைத்தார். இதில் பாதிக்கப்பட்டவர்கள் பெயரை குறிப்பிடாமல், அவர்களின் அடையாளத்தை வெளியே கொண்டு வராமல் பல குற்றச்சாட்டுகளை வெளியே கொண்டு வந்தார். பெரும்பாலான குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளவர் வைரமுத்து தான். தன் மீது சுமத்தப்படும் புகார் அனைத்தும் பொய் என்று வைரமுத்து மறுப்பு தெரிவித்து வந்தாலும் அவர் மீது தற்போது தோன்றியிருக்கும் சந்தேகம் மட்டும் விலகாமல் தொற்றிக்கொண்டே இருக்கிறது.
இதற்கிடையே, கடந்த வாரம் ஏ. ஆர். ரகுமானின் சகோதரி ஏ. ஆர். ரெஹானா வைரமுத்து மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் பொய் இல்லை என்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்தார். அந்த பேட்டியை தொடர்ந்து தற்போது ஏ. ஆர். ரகுமானும் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
— A.R.Rahman (@arrahman) 22 October 2018
அதில், “கடந்த சில நாட்களாக மி டூ விவகாரத்தை நான் கவனித்து வருகிறேன். அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. சினிமா துறையில் பெண்களுக்கு மரியாதையும் பாதுகாப்பும் இருக்கும் நிலையையே காண விரும்புகிறேன்.
சாதிக்க வருவோருக்கு எந்த இடையூறும் ஏற்படாத சூழலை உருவாக்க நானும், எனது குழுவினரும் உறுதியேற்றுள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் வெளியே பேசுவதற்காக மிகப்பெரிய சுதந்திரத்தை சமூக வலைதளம் கொடுத்தாலும், அது தவறாக பயன்படுத்தக் கூடது என்பதில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்”