இரண்டாம் முறையாக மத்தியில் பொறுப்பேற்றிருக்கும் பாஜக அரசு, இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தியை திணித்து வருவதாக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். உலகளவில் இந்தி எதிர்ப்பு ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆக, இந்திக்கு ஆதரவான ஹேஷ்டேக்கும் டிரெண்ட் செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டரில் ஒரு ட்வீட் பதிவு செய்துள்ளார். தனுஷ் நடித்த 'மரியான்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன? என்ற பாடலை ஒரு பஞ்சாப் சீக்கியர் பாடும் வீடியோவை பதிவு செய்த ரஹ்மான், 'தமிழ் பஞ்சாபிலும் பரவியுள்ளது' என்று குறிப்பிட்டுளார். ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த ட்வீட்டுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
June 2019
மேலும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரின் போது தமிழில் ட்வீட் செய்ததையும் நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி, ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதுபோல் தமிழ், பஞ்சாபில் பரவியுள்ளது என்பது உண்மைதான் என்று கூறி வருகின்றனர்.