இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும், 2 ஆஸ்கார் விருதுகளை வாங்கி கொடுத்தவருமான ஏ.ஆர்.ரஹ்மான், திருமணமாகி தனது மனைவியுடன் ஹனிமூனுக்கு சென்றபோது கூட, இசையமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக, அவரது உறவினரும், நடிகருமான ரஹ்மான் கூறியுள்ளார்.
1992-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாக ரஹ்மான், முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றிருந்தார். அதன்பிறகு தொடர்ந்து பல படங்களுக்கும், முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்த ரஹ்மான், 1995-ம் ஆண்டு திருமணம் சாய்ராபானு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த சாய்ரா பானுவின் சகோதரி கணவர் தான் நடிகர் ரஹ்மான்.
Read In English: AR Rahman was composing music during honeymoon while wife slept in another room, recalls brother-in-law
தமிழ் மலையாளம், தெலுங்கு, கன்னடம் இந்திய உள்ளிட்ட பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள ரஹ்மான், 1999-ம் ஆண்டு நடித்த சங்கமம் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இதனிடையெ தனது உறவினர் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ள நடிகர் ரஹ்மான், அவர் என்னை விட ஆன்மீக மனிதர், அவருக்கும் எனக்கும் பல வித்தியாசங்கள் இருக்கிறது என்று கூறிய நிலையில், திருமணமாகி ஹனிமூன் சென்றபோது ரஹ்மான் செய்த செயலை பற்றி கூறியுள்ளார்.
சித்தார்த் கண்ணனுடன் நடந்த ஒரு ஒரு நேர்காணலில், பேசிய நடிகர் ரஹ்மான், நானும் ஏ.ஆா.ரஹ்மானும், இரு துருவங்கள் என்ற அளவில் வேறுபட்டவர்கள். அவர் வடக்கு என்றால் நான் தெற்கு; அவர் மிகவும் ஆன்மீகம்; அமைதியாக இருப்பார். மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார். எனக்கு ஞாபகம் இருக்கிறது, அவர் திருமணம் ஆனவுடன், அவர் என் அண்ணியை ஹனிமூன் ஒரு மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அன்று இரவு நான் அவர்களை போனில் அழைத்தேன்.
அப்போது டைம் 12 அல்லது 1 ஆகிவிட்டது. போனை எடுத்த என் அண்ணி, தான் தூங்கிக்கொண்டிருப்பதாக சொன்னார். நான் ‘ரஹ்மான் எங்கே’ என்று கேட்டேன்.‘எனக்குத் தெரியாது’ என்று சொன்னார். அப்போது ரஹ்மான் வேறொரு அறையில் வீணையை வாசித்துக்கொண்டிருந்தார். ஏதோ ஒரு படத்திற்காக இசையமைத்துக் கொண்டிருந்தார்; அவர் அப்படிப்பட்ட நபர் அவர். ரஹ்மான் தனியாக இருக்க விரும்புகிறவர். அவர் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. ஆனால் நான் அவருக்கு நேர் எதிர். அதிகம் பேச விரும்புபவன்.
ரஹ்மான் ஆன்மிகத்தைத் தழுவுவது மற்றும் இஸ்லாத்திற்கு மாறுவது பற்றி அடிக்கடி பேசியுள்ளார். ஆக்ஸ்போர்டு யூனியனில் அவர், “நம் அனைவருக்கும் இருண்ட காலங்கள் உள்ளன. ஒன்று உறுதியானது; இது இந்த உலகில் ஒரு சிறிய பயணம். நாம் பிறந்தோம், போகப் போகிறோம். இது நிரந்தர இடம் இல்லை. நாம் எங்கு செல்கிறோம், என்பது யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு நபரின் சொந்த கற்பனை மற்றும் நம்பிக்கைகளைப் பொறுத்து இது மாறுபடும் என்று சொல்வார் என்று ரஹ்மான் கூறியுள்ளார்.
தி க்ளென் கோல்ட் ஃபவுண்டேஷனுடனான நேர்காணலில், ரஹ்மான் தனது தந்தையின் போராட்டங்களைக் கண்டபோது மதமாற்றம் குறித்து முதலில் சிந்தித்ததாகக் கூறியது பற்றி கேட்டபோது, “நீங்கள் இந்த நம்பிக்கைக்கு வர வேண்டும் என்று யாரும் எங்களிடம் கூறவில்லை. நான் இன்னும் அமைதியாக இருந்தேன். ஏதோ ஒரு விசேஷம் போல் உணர்ந்தேன். நிராகரிக்கப்பட்ட ஜிங்கிள்கள், பிரார்த்தனைக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்படும், ”என்று அவர் இஸ்லாத்தை தழுவுவது பற்றி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.