Advertisment
Presenting Partner
Desktop GIF

2 ஆஸ்கர் பெற்று தந்த படம்; ரகசியமாக பணிபுரிந்த இசை புயல்: ஸ்லம்டாக் மில்லியனர் சீக்ரெட் உடைக்கும் ஏ.ஆர் ரகுமான்

டேனி பாயிலின் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இருந்து நான் நீக்கப்படுவேன் என நினைத்தேன்- ஏ.ஆர் ரஹ்மான்

author-image
WebDesk
New Update
ARR osc

ஏ.ஆர் ரஹ்மானுக்கு 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுத் தந்த டேனி பாயிலின் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கான வாய்ப்பை தனது ஏஜென்ட் உடனடியாக நிராகரிக்கத் சொன்னார், நான் தான் அவர் மீதான அன்பு, மரியாதையில் ரகசியமாக பணிபுரிந்தேன் என்று சுவாரஸ்ய கதையைக் கூறினார்.  

Advertisment

2008-ல் வெளியான இந்த படம் ரஹ்மானுக்கு 2 ஆஸ்கர் விருதுகளை பெற்று தந்தது. இந்நிலையில், மெல்போர்னில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் ராம் சம்பத்துடன் உரையாடியபோது, ​​ரகுமான் ஸ்லம்டாக் மில்லியனர் படம் பற்றிய ரகசியங்களை உடைத்தார். 

ரகுமான் கூறுகையில், "நான் மும்பையில் டேனி பாயலை சந்தித்தேன். அப்போது அவர் இந்த வாய்ப்பு பற்றி என்னிடம் கூறினார். படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று விரும்பினார். நான் எனது ஏஜென்ட்டிடம் இதைப் பற்றி சொன்னேன். 

அவர் உடனே இந்த வாய்பை நிராகரிக்க சொன்னார். அவர் மிகவும் சிக்கலானவர், அவர் பல இசையமைப்பாளர்களுடன் பணிபுரிவார். உங்கள் இசையை நீக்கிவிடுவார் என்று கூறினார். ஆனால் எனக்கு டேனியின் முகம் தெரிந்தது. அது அன்பும் மரியாதையும் நிறைந்தது என்றார்.

மேலும், நான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதை நான் யாரிடமும் சொல்லவில்லை. ஏனென்றால் பின்னர் நான் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் அது யாருக்கும் தெரியாது. நான் ஏதோ ஆவணப்படத்திற்கு இசையமைக்கிறேன் என்று வெளியில் எல்லோருக்கும் சொல்லியிருந்தேன் என்று கூறினார். 

ஆங்கிலத்தில் படிக்க:   AR Rahman was sure he’d be ‘fired’ from Danny Boyle’s Slumdog Millionaire, was advised to ‘reject’ offer immediately

ஒரு மாதம் கடந்தது. என் ஏஜென்ட் எனக்கு போன் செய்து, ‘என்ன செய்தாய்? படத்தில் உங்கள் பெயர் உள்ளது. நாம் தான் ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லையே என்று கேட்டார். பின்னர் நீங்கள் பாடிய (ஜெய் ஹோ) பாடலை மக்கள் கொண்டாடுகிறார்கள் என்று கூறினார் என்றார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment