Advertisment
Presenting Partner
Desktop GIF

லால் சலாம் படம் மீது சந்தேகம் இருந்தது; ரஜினி அவரது ஞானத்தால் மாற்றிவிட்டார் – ஏ.ஆர்.ரஹ்மான்

லால் சலாம் படம் பிரசங்கமாக இருக்கும் என்று நினைத்து ஆரம்பத்தில் கவலைப்பட்டேன்; ரஜினி தனது ஞானத்தால் என் நிலைப்பாட்டை மாற்றிவிட்டார்; ஆடியோ வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு

author-image
WebDesk
New Update
lal salaam rahman

லால் சலாம் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்துடன் ஏ.ஆர்.ரஹ்மான்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

லால் சலாம் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் குறுகிய மற்றும் சக்திவாய்ந்த பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஏனெனில் புகழ்பெற்ற இசையமைப்பாளரான ரஹ்மான் படத்தைப் பற்றி பேசும்போது, படத்தின் கதையை ஏற்றுக்கொள்வதில் அவர் ஆரம்பத்தில் தயக்கம் கொண்டிருந்ததாக நேர்மையாக கூறினார். ரஹ்மான் ஆரம்பத்தில் படத்தைப் பற்றி சந்தேகம் கொண்டிருந்தார், மேலும் லால் சலாம் படம் போதனையாகவும் பிரசங்கமாகவும் இருக்கும் என்று கவலைப்பட்டார். இருப்பினும், அவரது நினைப்புக்கு மாறாக, படம் அவரை ஆச்சரியப்படுத்தியது, மேலும் அவரை கவலையடையச் செய்த அதே காட்சிகள் ரஹ்மானுக்கு மனதைக் கவரும் தருணங்களாக மாறியது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: AR Rahman was worried scenes in Lal Salaam will be ‘cringy, preachy’ but was surprised: ‘It’s Rajinikanth’s wisdom’

படத்தின் கதையை ஐஸ்வர்யா என்னிடம் முதலில் சொன்னபோது... இந்தப் படம் சலிப்பாக இருக்கும் டாஎன்று நினைத்தேன். படம் பிரசங்கமாக இருக்கும் என்று நினைத்தேன். நான் படம் பார்க்கும் வரை... கிறுக்குத்தனமாகவும், பிரசங்கமாகவும் இருக்கும் என்று நினைத்த காட்சிகள் மிகவும் சிந்தனையுடன் கையாளப்பட்டு, மனதைக் கவரும் வகையில் இருந்தது. பிறகு அந்தப் படத்துக்கு யார் வசனம் எழுதியது என்று ஐஸ்வர்யாவிடம் கேட்டேன், அவர், ‘நான் எழுதினேன், அப்பா கொஞ்சம் மாற்றினார்என்று சொன்னார். நான் அவருடைய ஞானம் என்று உணர்ந்தேன். அனைத்தையும் மதித்து நடப்பதால், நன்கு ஆராய்ந்து பல அரிய விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்'' என்று ரஹ்மான் கூறினார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பற்றி பேசிய ரஹ்மான், “சூப்பர் ஸ்டாரின் மகள். அவருடைய மகளாக இருப்பது மிகவும் கடினம். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். நீங்கள் எதைச் செய்தாலும் விமர்சனங்களை எதிர்கொள்கிறீர்கள். நடனம் ஆடுவது, திரைப்படம் தயாரிப்பது, சில ஆடைகளை அணிவது போன்றவற்றால் நீங்கள் விமர்சிக்கப்படுகிறீர்கள்... ஆனால் எல்லாவற்றையும் மீறி நீங்கள்ங்களை நிரூபித்திருக்கிறீர்கள்," என்று கூறினார்.

ஏ.ஆர்.ரஹ்மான் ரஜினிகாந்துடன் நிறைய படங்களில் பணியாற்றியவர். இருப்பினும், 2.0 (2018) படத்திற்குப் பிறகு, இருவரும் கைகோர்க்கவில்லை. லால் சலாமுடன் அவர்கள் அந்த இடைவெளியை முறியடித்துள்ளனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், தன்யா பாலகிருஷ்ணன், விவேக் பிரசன்னா, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajinikanth A R Rahman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment