பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு ஆகிய இருவரும் விவாகரத்து செய்வதாக கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அறிவித்தனர். 30 ஆண்டுகால திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். இந்நிலையில், தற்போது ரகுமானின் நிகர சொத்து மதிப்பில் கவனம் திரும்பியுள்ளது.
இந்தியாவில் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக ரகுமான் உள்ளார்.
டி.என்.ஏ மற்றும் பிற ஆதாரங்களின்படி, இசை மேஸ்ட்ரோ ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு ரூ.1,728 கோடி முதல் ரூ.2,000 கோடி வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நாட்டில் அதிக சம்பளம் வாங்கும் பாடகராகவும் அவர் உள்ளார். ஒரு பாடலுக்கு ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
அதே நேரம் நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக ஒரு படத்திற்கு ரூ.10 கோடி வரை பெறுகிறார். படங்களில் பணியாற்றுவது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்துவது, விளம்பரங்களில் நடிப்பது மற்றும் பிற தொழில் முனைவோர் முயற்சிகள் வரை அவரது சொத்து பட்டியல் நீள்கிறது.
இது அவரை நாட்டின் பணக்கார இசைக்கலைஞர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏ.ஆர்.ரகுமான் மிக உயரிய திரைப்பட விருதான 2 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார். அதோடு தேசிய திரைப்பட விருதுகள், அகாடமி விருதுகள், கிராமி விருதுகள் மற்றும் பத்ம பூஷன் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“