ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மீடியா முன் தோன்ற வெட்கப்படும் அவரது மனைவி சாய்ரா பானு சமீபகாலமாக பல்வேறு நிகழ்வுகளில் ஸ்டைலான ஜோடியாக வலம் வருகிறார்கள். இருப்பினும், ரஹ்மான் தனது ஃபேஷன் உடைகளை தன் மனைவி தேர்வு செய்வதாக கூறுகிறார். என் மனைவி எதை அணியச் சொன்னாலும் அதை அணிவேன் என்றும் ரஹ்மான் கூறினார்.
லில்லி சிங்குடனான முந்தைய நேர்காணலில், ரஹ்மான், “என் மனைவி உண்மையில் ஸ்டைலாக இருப்பதை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார். அவர் தான் என்னை அலங்கரிக்கிறார். கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக, அவர் தான் உடை உள்ளிட்ட பொருட்களை வாங்குகிறார், அது நன்றாக இருக்கும் என்று அவர் நினைக்கிறார். அவர் அதைச் விருப்பப்பட்டு செய்கிறார் என்று நினைக்கிறேன். எனவே எல்லாம் அவருடைய விஷயம். அவர் உடைகளை வாங்கி, அதை அணியச் சொன்னால், நான் அதை அணிவேன். எனவே எனது அனைத்து அசைவுகளும் அவரிடமிருந்து வருகிறது,” என்று கூறினார்.
இதையும் படியுங்கள்: பிரபல நடிகைக்காக பரிந்து பேசிய பாலச்சந்தர்; குருவையே ‘கட்’ செய்த விசு
பின்னர் லில்லி சிங், "எப்போதாவது உங்கள் மனைவி அணியச் சொன்னதை, இல்லை, இல்லை முடியாது என அணிய மறுத்தது உண்டா? கேட்க, “இல்லை, இல்லை, அவர் கொஞ்சம் பாரம்பரியமானவள் என்று நினைக்கிறேன். உண்மையில், அவர் அடிக்கடி கருப்பு நிறத்தை தேர்வு செய்கிறார், நான் அவரிடம் வேறு நிறத்தை மாற்ற முடியுமா என்று கேட்டேன், அவர் ஒப்புக்கொண்டார். அவர் மிகவும் பிடிவாதமானவர் மற்றும் விஷயங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்." என்று ரஹ்மான் கூறினார்.
ரஹ்மான் தனது ஃபேஷன் தேர்வுகளைப் பற்றி பேசுகையில், “சிறிது காலத்திற்குப் பிறகு, அதை கவனிப்பதை நிறுத்திவிடுகிறோம். நீங்கள் அதைச் செய்துவிட்டு, 'ஓ, ஆமாம், நான் இதை செய்யப் போகிறேன்' என்று சொல்லுங்கள். எல்லோரும் சிரித்தனர், ஆனால் இறுதியில், அது நன்றாக மாறியது என்று நினைக்கிறேன். நான் தூய்மையான பக்கத்திலிருந்து வந்ததாக உணர்கிறேன், மேலும் சலிப்பான பக்கத்திலிருந்து வந்திருக்கிறேன்,” என்று கூறினார்.
ரஹ்மானும் சாய்ராவும் 1995 இல் திருமணம் செய்து கொண்டனர் சிமி கரேவாலுக்கு அளித்த பேட்டியில், ரஹ்மான் . இது அவரது தாயாரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும், தனக்கு மணமகளைத் தேடிச் செல்ல நேரமில்லை என்றும், அதனால் தான் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை செய்ய முடிவு செய்ததாகவும் தெரிவித்திருந்தார். . தம்பதியருக்கு கதீஜா மற்றும் ரஹிமா என்ற இரண்டு மகள்கள் மற்றும் அமீன் ரஹ்மான் என்ற மகன் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil