Advertisment

MaaMannan Audio Launch Highlights : உதயநிதி சினிமாவிற்கு வர வேண்டாம் - விஜய் ஆண்டனி

MaaMannan Audio Launch with AR Rahman : உதயநிதியின் மாமன்னன் படத்தின் இசைவெளியீட்டு விழா குறித்து முக்கிய அப்டேட்கள் பெற இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுடன் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MaaMannan Grand Audio Launch Live by AR Rahman

மாமன்னன்

MaaMannan Grand Audio Launch at Nehru Stadium : பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள 3-வது படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின், வடிவேலு கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்ட பல நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Advertisment

மேலும் இதுவரை காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக பார்த்த நடிகர் வடிவேலு இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் நடித்துள்ளார். மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது. ஏற்கனவே படத்தில் இருந்து வெளியான சில பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த நிலையில், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:46 (IST) 01 Jun 2023
    உதயநிதி சினிமாவிற்கு வர வேண்டாம் - விஜய் ஆண்டனி

    அனைவரும் நீங்கள் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதை வேறு விதமாக பேசுகிறார்கள். ஆனால் நான் அவரை வாழ்த்தி வழியனுப்பி வைக்கிறேன். நீங்கள் சினிமாவிற்கு வர வேண்டாம். அங்கேயே இருங்கள் என்று மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.



  • 21:14 (IST) 01 Jun 2023
    விழாவிற்கு வருகை தந்த நட்சத்திரங்கள்

    'மாமன்னன்' இசை வெளியீட்டு விழாவிற்கு இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், பா.ரஞ்சித், ஹெச்.வினோத், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வருகை!



  • 21:13 (IST) 01 Jun 2023
    தங்கலான் அப்டேட் கொடுத்த இயக்குநர் பா.ரஞ்சித்!

    'மாமன்னன்' இசை வெளியீட்டு விழாவில், தங்கலான் அப்டேட் கொடுத்த இயக்குநர் பா.ரஞ்சித்!

    தங்கலான் படப்பிடிப்பு வரும் 15-ந் தேதி தொடங்கி 12 நாட்களாக நடைபெற உள்ளது. விக்ரம் மிகவும் ஜாலியாக இருக்கிறார் என்று இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

    மேலும் மாமன்னன் படத்திலும் ஒரு முக்கியமான அரசியல்தான் பேசியிருக்கிறார் மாரி செல்வராஜ் எனவும் இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.



  • 21:12 (IST) 01 Jun 2023
    தங்கலான் அப்டேட் கொடுத்த இயக்குநர் பா.ரஞ்சித்!

    'மாமன்னன்' இசை வெளியீட்டு விழாவில், தங்கலான் அப்டேட் கொடுத்த இயக்குநர் பா.ரஞ்சித்!

    தங்கலான் படப்பிடிப்பு வரும் 15-ந் தேதி தொடங்கி 12 நாட்களாக நடைபெற உள்ளது. விக்ரம் மிகவும் ஜாலியாக இருக்கிறார் என்று இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

    மேலும் மாமன்னன் படத்திலும் ஒரு முக்கியமான அரசியல்தான் பேசியிருக்கிறார் மாரி செல்வராஜ் எனவும் இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.



  • 20:59 (IST) 01 Jun 2023
    மாமன்னன் படத்தில் அனைத்து பாடல்களின் தொகுப்பு வெளியீடு


  • 20:27 (IST) 01 Jun 2023
    உதயநிதி ஸ்டாலின் பேச்சு

    நான், பஹத், கீர்த்தி படத்துல இருக்கோம்; ஆனா எல்லோரையும் தள்ளி வச்சிட்டு ஒரு கேரக்டர் பண்ணிருக்காரு வடிவேலு சார்..!" என மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

    மேலும் 'இன்னொரு படம் நடித்தால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் பண்ணுவேன்' எனவும் உதயநிதி கூறியுள்ளார்



  • 20:26 (IST) 01 Jun 2023
    எனக்கு கேப்பே இல்ல.. வடிவேலு பேச்சு

    "எனக்கு கேப்பே இல்ல.. மீம்ஸ் மூலமா உங்க போன்ல வந்துட்டுதான இருக்கேன்!" என 'மாமன்னன்' இசைவெளியீட்டு விழாவில் கலகலப்பாக பேசிய நடிகர் வடிவேலு!



  • 20:18 (IST) 01 Jun 2023
    வடிவேலு வருகை

    மாமன்னன் இசைவெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கும் நடிகர் வடிவேலுவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



  • 19:44 (IST) 01 Jun 2023
    உதயநிதி ஸ்டாலின் பேச்சு

    நான், பஹத், கீர்த்தி படத்துல இருக்கோம்; ஆனா எல்லோரையும் தள்ளி வச்சிட்டு ஒரு கேரக்டர் பண்ணிருக்காரு வடிவேலு சார்..!" என மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

    மேலும் 'இன்னொரு படம் நடித்தால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் பண்ணுவேன்' எனவும் உதயநிதி கூறியுள்ளார்



  • 19:29 (IST) 01 Jun 2023
    பறை இசையுடன்

    பறை இசையுடன் தொடங்கிய மாமன்னன் இசை வெளியீட்டு விழா



  • 19:28 (IST) 01 Jun 2023
    தொகுப்பாளர்களாக திவ்ய தர்ஷினி, ஆர்ஜே விஜய்

    உதயநிதி ஸ்டாலின், வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் நிலையில் இந்நிகழ்ச்சியை திவ்ய தர்ஷினி, ஆர்ஜே விஜய் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.



  • 19:25 (IST) 01 Jun 2023
    மாமன்னன் புதிய போஸ்டர்

    உதயநிதி ஸ்டாலின், வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.



  • 18:59 (IST) 01 Jun 2023
    உதயநிதி ஸ்டாலின் ட்விட்

    மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள 'மாமன்னன்' படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் பட்டியலை வெளியிட்டார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்!

    இதை தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டள்ளார்.



  • 18:58 (IST) 01 Jun 2023
    உதயநிதி ஸ்டாலின் ட்விட்

    மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள 'மாமன்னன்' படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் பட்டியலை வெளியிட்டார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்!

    இதை தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டள்ளார்.

    maamannan track list is here.



    Songs out at 7:30PM today. @mari_selvaraj @arrahman vadivelu @KeerthyOfficial fahadhfaasil @RedGiantMovies_ @thenieswar @editorselva @dhilipaction @MShenbagamoort3 @kabilanchelliah @kalaignartv_off @SonyMusicSouth @NetflixIndia @teamaimpr pic.twitter.com/PNBHfV7zo3

    — Udhay (@Udhaystalin) June 1, 2023



  • 18:57 (IST) 01 Jun 2023
    மேளதாளத்துடன் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

    மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் நேரு விளையாட்டு அரங்கம் முன்பு மேளதாளத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



  • 18:56 (IST) 01 Jun 2023
    தலைவர்களின் கருத்துக்கள் அடங்கிய தீம்

    மாமன்னன்' இசை வெளியீட்டு விழாவில் அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் அடங்கிய தீம் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.



  • 18:49 (IST) 01 Jun 2023
    கீர்த்தி சுரேஷ் ட்விட்

    மாமன்னன் குறித்து கீர்த்தி சுரேஷ் ட்விட்



  • 17:51 (IST) 01 Jun 2023
    ஹாட்ரிக் வெற்றியை நோக்கி மாரி செல்வராஜ்

    பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாரி செல்வராஜ் அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கர்ணன் படத்தை இயக்கினார். இந்த 2 படங்களும் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அவரின் 3-வது படமான மாமன்னன் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



  • 17:46 (IST) 01 Jun 2023
    உதயநிதியின் கடைசி படம்

    முழுநேர நடிகராக இருந்த உதயநிதி ஸ்டாலின் இப்போது முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்ட நிலையில், மாமன்னன் படம் தான் தனது கடைசி படம் என்று அறிவித்துள்ளார்.



  • 17:46 (IST) 01 Jun 2023
    இறுதிக்கட்ட பணிகளில் மாமன்னன்

    அரசியல் சார்ந்த கதையம்சம் கொண்ட மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.



  • 17:28 (IST) 01 Jun 2023
    ரஜினிகாந்த் மிஸ்ஸிங்

    புதுச்சேரியில் நடைபெற்று வரும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொளள் இருப்பதால் நடிகர் ரஜினிகாந்த் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.



  • 15:17 (IST) 01 Jun 2023
    மாமன்னன் இசை வெளியீட்டு விழா கமல்ஹாசன் பங்கேற்பு

    மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் பங்கேற்க உள்ள நிலையில், இதனை நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.



Udhayanidhi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment