/tamil-ie/media/media_files/uploads/2018/11/ar-rahman.jpg)
ar rahman 99 songs
AR Rahman's 99 Songs : இரண்டு கைகளிலும் ஆஸ்கர் விருதுகளை அள்ளி, உலக அரங்கில் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
சமீபத்தில் அவெஞ்சர்ஸ் திரைப்படத்திற்காக ‘மார்வெல் ஆன்தெம்’ பாடலை உருவாக்கினார்.
தற்போது நடிகர் விஜய் நடிக்கும், தளபதி 63 திரைப்படத்திற்கு பணி புரிந்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் முதன் முறையாக ஒரு திரைப்படத்திற்கு இவரே, கதை எழுதி அதை தனது ஒய்.எம் மூவிஸ் என்ற பேனரில் தயாரிக்கவும் செய்திருக்கிறார். படத்தின் பெயர் ‘99 சாங்ஸ்’.
இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இதனை இயக்கியிருக்கிறார்.
தற்போது இதைப்பற்றி ரஹ்மான்,
“நான் தயாரித்து, எழுதியிருக்கும் முதல் படமான '99 சாங்ஸ்' (99 Songs) என்கிற உணர்வுப்பூர்வமான காதலை அடிப்படையாகக் கொண்ட மியூஸிக்கல் படத்தின் வெளியீடு குறித்து அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியிடைகிறேன்.
எனது தயாரிப்பு நிறுவனமான எய்.எம் மூவிஸ், ஜியோ ஸ்டுடியோஸோடு இந்தப் படத்தின் வெளியீட்டில் கூட்டு சேர்ந்துள்ளதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன்.
A very special announcement @YM_Movies@offjiostudios@JioCinema@idealentincpic.twitter.com/iIe6bcsSus
— A.R.Rahman (@arrahman) April 11, 2019
'99 சாங்ஸ்' திரைப்படம் சர்வதேச அளவில், இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் 21 ஜூன் 2019 அன்று வெளியாகும். இதுவரைக்கும் என் மீது நீங்கள் அனைவரும் காட்டும் அன்பு, ஆதரவு மற்றும் ஊக்கத்துக்கு நன்றி” என சமூக வலைதளங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுவரை இசைப்புயலின் இசை வித்தையில் லயித்திருக்கும் ரசிகர்கள், அவரது கதை ரசனையை திரையில் பார்க்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.