Advertisment

எளிமையான முறையில் அரங்கேறிய ரஹ்மான் மகள் திருமணம்… வைரலாகும் புகைப்படங்கள்!

AR Rahman’s daughter Khatija Rahman Wedding pics goes viral in social media Tamil News: மணமக்களுடன் குடும்பத்தினர் இருக்கும் புகைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
AR Rahman's Daughter Khatija's Wedding photos goes viral

AR Rahman's Daughter Khatija's Wedding pics

AR Rahman Tamil News: இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர், இரண்டு ஆஸ்கார் விருதுகள் மற்றும் பல விருதுகளுக்கும் புகழுக்கும் சொந்தக்காரராக வலம் வருபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அவருக்கு கதீஜா, ரஹீமா என்று இரண்டு மகள்களும் ஆமீன் என்ற மகனும் உள்ளனர். இவர்களில் மூத்த மகளான கதீஜாவுக்கு எளிமையாக முறையில் நேற்று வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது.

Advertisment

கடந்த ஜனவரி மாதமே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், நெருங்கிய சொந்தங்கள், நட்பு வட்டாரத்துடன் நேற்று எளிமையாக திருமணம் நடைபெற்றது. இசைப்புயலின் மருமகன் ரியாசுதீன் ஷேக் முகமது ஆடியோ இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

தற்போது மணமக்களின் திருமணப் புகைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், புதுமணத் தம்பதியருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

publive-image

மேலும், ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த புகைப்படங்கள் இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் அந்த பதிவில், "எல்லாம் வல்ல இறைவன் தம்பதியரை ஆசிர்வதிக்கட்டும்.. உங்களின் அன்பிற்கும் வாழ்த்துக்கும் முன்கூட்டியே நன்றி கூறுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் புதுமணத் தம்பதி அலங்கார இருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு பின்னணியில் ரஹ்மான், அவரது மனைவி சாய்ரா, இடது ஓரத்தில் ரஹ்மானின் 2வது மகள் ரஹீமா, ரஹ்மானுக்கு அருகில் அவரது மகன் ஆமீன் நிற்கிறார்கள். மற்றும் வலது ஓரத்தில் ரஹ்மானின் தாயாரின் புகைப்படம் உள்ளது.

publive-image

இதேபோல் மணப்பெண் கதீஜா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "இதுதான் என் வாழ்வில் நான் எதிர்பார்த்துக் காத்திருந்த நாள். என்னவரை கரம் பிடித்தேன்" என்று பதிவிட்டுள்ளார். அவருக்கும் பிரபலங்கள் உள்பட பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Entertainment News Tamil Ar Rahman Viral Photo Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment