Advertisment

ஒரே ஷோபாவில் தமன்னா, ராஷி கன்னா: ரசிகர்களை கவர்ந்த கலக்கல் காம்போ

அரண்மனை 4 டிரெய்லர் வெளியீட்டு விழா; ஒரே ஷோபாவில் அமர்ந்து ரசிகர்களை கவர்ந்த தமன்னா, ராஷி கன்னா; வைரல் வீடியோ

author-image
WebDesk
New Update
tamannah rashi

அரண்மனை 4 டிரெய்லர் வெளியீட்டு விழா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அரண்மனை 4 பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தின் நாயகிகளான தமன்னாவும் ராஷி கன்னாவும் ஒரே ஷோபாவில் அமர்ந்து ரசிகர்களை கவர்ந்தனர்.

Advertisment

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 4 டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3 படங்களைத் தொடர்ந்து அரண்மனை 4 படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். மேலும் இந்தப் படத்தில் சுந்தர். சி ஹீரோவாகவும் நடித்துள்ளார். முந்தைய அரண்மனை படங்களைப் போலவே இந்தப் படத்திலும் 2 ஹீரோயின்கள் உள்ளனர். தமன்னா மற்றும் ராஷி கன்னா ஹீரோயின்களாக நடித்துள்ளனர். மேலும், யோகி பாபு, கோவை சரளா, கே.ஜி.எஃப் வில்லன் ராமசந்திர ராஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அரண்மனை படங்கள் இதுவரை 3 பாகங்கள் வெளியாகி உள்ளன. முதல் 2 பாகங்கள் நன்றாக ஓடிய நிலையில், 3வது பாகம் சுமாராகவே ஓடியது. இருப்பினும் அரண்மனை 4 படத்தை சுந்தர் சி நம்பிக்கையுடன் இயக்கியுள்ளார்.

அரண்மனை 4 டிரெய்லரை பார்த்தால் படம் நல்ல பொருட்செலவில் தரமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. படத்தில் தமன்னாவும் ராஷி கன்னாவும் சிறப்பாக நடித்திருப்பதாக டிரைலரை பார்த்தால் தெரிகிறது. கிளைமாக்ஸில் குஷ்பூ பிரமாண்ட சாமி சிலை முன்பு நடனமாடி பேயை ஓட்டுவதாக தெரிகிறது.

இந்தநிலையில், நேற்று நடைபெற்ற அரண்மனை 4 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தமன்னாவும் ராஷி கன்னாவும் அழகான உடை அணிந்து சிறப்பான தோற்றத்தில் காட்சி அளித்தனர். மேலும், இருவரும் ஒரே சோபாவில் உட்கார்ந்து கொண்டு ரசிகர்களை வசீகரித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamannah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment