Aranmanai Kili Serial: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், அரண்மனை கிளி சீரியலில் ஜானுவை திருமணம் செய்துக் கொள்கிறான் மாற்றுத் திறனாளி அர்ஜூன். ஏற்கனவே காதல் முறிவு ஏற்பட்டிருந்த அர்ஜூனுக்கு, முதலில் பார்த்தது ஜானுவின் அக்காவைத் தான். ஆனால் அவளோ திருமணத்திற்கு முதல் நாள் வீட்டை விட்டு ஓடி விட, குடும்ப மரியாதையைக் காப்பாற்ற, மணமகளாகிறாள் ஜானு.
Advertisment
திருமணத்துக்குப் பிறகு ஜானுவை பிடிக்காத அர்ஜூன், அவளை விவாகரத்து செய்ய முடிவெடுத்து, அதை அம்மா மீனாட்சியிடம் கூறுகிறான். அம்மாவும் மகனின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் உன் விருப்பம் அர்ஜுன் என்றுக் கூறிவிடுகிறார். விவாகரத்துக்கு அப்ளை செய்து, கோர்ட்டில் வழக்கும் நடந்து வருகிறது.
இந்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக அர்ஜுன் மனதில் இடம் பிடித்த ஜானு, மீனாட்சி அம்மாவின் மனதிலும் இடம் பிடித்து விடுகிறாள். இருப்பினும் மகனின் விருப்பத்தில் தலையிட விரும்பாத மீனாட்சி, அதை அப்படியே விட்டு விட்டு, ஜானுவிடம் அன்பும் கனிவும் காட்டுகிறார். அர்ஜூன் எழுந்து நடக்க, பல்வேறு பூஜைகளையும், விரதங்களையும் கடைப்பிடிக்கிறாள் ஜானு. இன்னும் ஒருபடி மேலே சென்று, தனது உயிரை காணிக்கையாக்கும் விபரீத முடிவையும் எடுக்கிறாள்.
Advertisment
Advertisements
இதற்கிடையே அர்ஜூன் - ஜானுவின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்கு வரும் நாள் நெருங்குகிறது. அப்போது அம்மா மீனாட்சியை தனியே அழைத்த அர்ஜூன், தான் ஜானுவுடன் வாழ விரும்புவதைக் கூறுகிறான். இதைக் கேட்ட மீனாட்சி, ”எனக்கும் ஜானு மீது பெரிய நம்பிக்கை வந்து விட்டது. அவள் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வாள்” என்கிறார். நாளைக்கு விவாகரத்து வழக்கு வருகிறதே என்ன செய்வது என அர்ஜூன் கேட்க, கேஸை வாபஸ் வாங்கி விடலாம் என்றதோடு, சிறந்த இல்வாழ்க்கைக்கான சில அறிவுரைகளையும் வழங்குகிறார். மகனின் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளிக்கும் இந்த அம்மா, பார்வையாளர்களை நெகிழ வைக்கிறார்.