’வாத்தி கம்மிங் ஒத்து’: ‘அரண்மனைகிளி’ மீனாட்சியம்மாவின் ‘மாஸ்’ டான்ஸ்!

Vijay TV Serial : பிரபலங்களையும், ரசிகர்களையும், ‘வாத்தி கம்மிங் ஒத்து’ பாடல் வெகுவாக கவர்ந்துள்ளது.

By: April 15, 2020, 4:37:05 PM

Aranmanai Kili Serial Pragathi: இந்த லாக் டவுன் கால கட்டம், சமூக ஊடகங்கள் வழியாக பலரின் மறைக்கப்பட்ட திறமைகளை வெளிப்படுத்த ஏதுவாக அமைந்துள்ளது. பிரபலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பல நட்சத்திரங்கள் தங்களின் சமையல் திறன், கவிதை திறன், புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றை வெளியுலகிற்கு காண்பிக்கும் வேளையில், முன்னாள் கதாநாயகி ஒருவர் தனது நடன திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

கீர்த்தி, கிக்கி எல்லாம் இருக்கட்டும்: இவங்க உண்மையான பேர் என்ன தெரியுமா?

இயக்குநர் கே.பாக்யராஜின் ‘வீட்ல விஷேசங்க’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரகதி. அதைத் தொடர்ந்து அவர் ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ‘அரண்மனை கிளி’ சீரியலில் மீனாட்சியம்மா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோ அர்ஜூனின் அம்மாவாக நடித்து வருகிறார்.

பிரகதி சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பானவர். இப்போது தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்றுள்ள, ’வாத்தி கம்மிங் ஒத்து’ என்ற பாடலுக்கு தனது எனெர்ஜியான நடனத்தை ஆடியிருக்கிறார். இந்த 44 வயது நடிகை தனது மகனுடன் இணைந்து ஆடியிருக்கும் இந்த டான்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 10 ஆயிரம் நிதி உதவி தர வேண்டும் – தயாநிதி மாறன்

தவிர, பிரபலங்களையும், ரசிகர்களையும், ‘வாத்தி கம்மிங் ஒத்து’ பாடல் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Aranmanaikili serial pragathi dance for vaathi coming othu thalapathy vijay

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X