/tamil-ie/media/media_files/uploads/2019/10/Aranmanai-Kili.jpg)
Aranmanai Kili
Aranmani Kili Serial: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘அரண்மனை கிளி’ சீரியல் சின்னத்திரை ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
மாற்றுத் திறனாளியான அர்ஜூனுக்கும் ஜானுவுக்கும் திருமணம் நடக்கிறது. இதில் கொஞ்சமும் விருப்பம் இல்லாத அர்ஜூன் விவாகரத்துக்கு முயற்சிக்கிறான். அவனது விருப்பமே தன் விருப்பம் என, அவன் மீது தான் கொண்டிருக்கும் அன்பை தனக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்கிறாள் ஜானு. இப்போது இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்துக் கொண்டிருக்கிறது.
கோலம் போடுவது பூஜை செய்வது என்று, அர்ஜூனின் அம்மா மீனாட்சியின் மனதில் இடம் பிடித்துவிட்டாலும், விவாகரத்து தான் என்கிற முடிவில் இருக்கிறார் அவர். சரி என்ன நடந்தாலும் அது படி நாமும் இருப்போம் என்கிற முடிவில் இருக்கிறாள் ஜானு. அர்ஜூனும் ஜானுவும் ஒருவரை ஒருவர் உள்ளுக்குள் காதலிக்க ஆரம்பித்து இருந்தாலும், விவாகரத்து வேண்டாம் என்று அர்ஜூனால் தெளிவான முடிவெடுக்க முடியவில்லை.
ஜானுவை வெறுத்த அர்ஜுனின் அம்மா மீனாட்சி அவள் மீதிருந்த கோபத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து, இப்போது அவளது பாரம்பரிய விஷயங்களை மதிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இதனால் சந்தோஷமாக இருக்கிறாள் ஜானு.
அர்ஜுனின் தம்பி அருண் கல்யாண ஏற்பாடுகளில் மீனாட்சி ஜானுவை தினமும் பூஜை செய்ய சொல்கிறார் மீனாட்சி. கல்யாண பத்திரிகையைக் கூட நீயே பூஜை ரூமில் வச்சு பூஜை செய்து எடுத்து வா என்று ஜானுவிடம் சொல்கிறார். இதற்கிடையே கோலம் போடப்போகும் ஜானுவிடம், ”இந்த காலத்திலும் இதெல்லாம் செய்றியா” எனக் கேட்கிறார் மீனாட்சியின் நாத்தனார்.
அதற்கு, ”அம்மாவுக்கு வாசலில் கோலம் போட்டிருந்தால் ரொம்பப் பிடிக்கும். அதோடு வாசலில் கோலம் போட்டுருந்தா, அந்த குடும்பமே மகிழ்ச்சியில் இருக்குதுன்னு அர்த்தம்” என்கிறாள் ஜானு. இனி பார்வையாளர்களும் தங்கள் வீடுகளில் நிச்சயம் கோலம் போட்டு விடுவார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.