என் குழந்தைக்கு தாய்மாமன் இவர்... மகேஷ் நெஞ்சில் சாய்ந்து கண்கலங்கிய நிஷா!
Erode Mahesh is my brother Aranthangi Nisha emotional speech at BB jodigal final: ஆம்புலன்ஸ் ஸ்பீடில் வந்து உதவியர் ஈரோடு மகேஷ்; பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷா நெகிழ்ச்சி
Erode Mahesh is my brother Aranthangi Nisha emotional speech at BB jodigal final: ஆம்புலன்ஸ் ஸ்பீடில் வந்து உதவியர் ஈரோடு மகேஷ்; பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷா நெகிழ்ச்சி
ஈரோடு மகேஷ் என் குழந்தைக்கு தாய் மாமன் என பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் அறந்தாங்கி நிஷா.
Advertisment
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. விஜய் டிவி எப்போதும் புதுமையான நிகழ்ச்சிகளை வழங்கி வரும், அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போட்டியாளர்களைக் கொண்டு பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை வழங்கி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பாலாஜி, நிஷா, ரமேஷ், சம்யுக்தா, அனிதா உள்ளிட்டோர் பங்கேற்று, தங்களது நடனத்திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக ராஜமாதா ரம்யா கிருஷ்ணனும், நடிகர் நகுலும் உள்ளனர்.
பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் தாடி பாலாஜியுடன் இணைந்து நடனமாடி வருகிறார் அறந்தாங்கி நிஷா. ஆரம்பத்தில் இவர்களது நடனத்தைப் பார்த்தவர்கள் ஒரு சில சுற்றுகளோடு வெளியேறிவிடுவார்கள் என்று கூறிவந்தார். ஆனால் இருவரும் தங்களது நடன திறமையை அதிகரித்துக் கொண்டு தற்போது இறுதிப்போட்டிக்கு வந்துள்ளனர்.
Advertisment
Advertisements
இந்த நிகழ்ச்சியின், இறுதிப்போட்டி வருகின்ற ஞாயிற்றுக்கிழமையன்று ஒளிப்பரப்பாக உள்ளது. அதற்கான ப்ரோமோக்களை விஜய் டிவி வெளியிட்டு வருகிறது. அப்படியான ஒரு ப்ரோமோவில் மகேஷ் செய்த உதவியை சொல்லி கண்கலங்கியுள்ளார் அறந்தாங்கி நிஷா.
அந்த ப்ரோமோவில் நிஷா, என்னுடைய குழந்தை பிறந்து 60 ஆவது நாளில் கார் கவிழ்ந்த விபத்து நடந்துச்சு, அப்போது ஆம்புலன்ஸ் ஸ்பீடில் வந்து உதவியர் ஈரோடு மகேஷ், அப்போது அவர் சொன்ன வார்த்தை உன் குழந்தை இன்னைக்கு இவ்வளவு அழுதுருக்கு, வாழ்க்கையில் இனி அழவே அழாது என்று சொன்னாரு, இன்னைக்கு வரைக்கும் என் குழந்தை அழுகலை, எங்களுக்கு இடையே எந்த தொப்புள் கொடி உறவும் கிடையாது, என்னுடைய சகோதரனுக்கு நன்றி, என்னுடைய குழந்தை சஃபா, மகேஷ் அண்ணனுக்கு சீர் செய்யணும் என்று ஆசைப்படுகிறாள், என்று மகேஷின் நெஞ்சில் சாய்ந்து கண் கலங்கிறார். பின்னர் தன் மகளைக் கொண்டு மகேஷூக்கு சீர் செய்கிறார்.
இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் ஈரோடு மகேஷை பாராட்டி வருகின்றனர். மேலும் தொகுப்பாளர்களை முன்னிறுவதை விஜய் டிவி எப்போதும் செய்து வருகிறது. எல்லோரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கிய விஜய் டிவிக்கு நன்றி என பதிவிட்டு வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil