New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/02/nisha.jpg)
aranthangi nisha image, aradnhtangi nisha instagram video , aranthangi nisha viral
நா பெத்துபோட்ட பிள்ளை இனி அவள் தாய்மாமன் பொறுப்பு, எனது மகள் என் தமையன் மாதிரி இருக்கானு எல்லாரும் சொல்றாங்க, அது எனக்கு சந்தோசமா இருக்கு -அறந்தாங்கி நிஷா
aranthangi nisha image, aradnhtangi nisha instagram video , aranthangi nisha viral
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மூலம் மிகவும் பிரபலமான அறந்தாங்கி நிஷாவிற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சஃபா ரியாஸ் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில், அறந்தாங்கி நிஷா தனது இன்ஸ்டகிராம் அக்கவுண்டில் வீடியோ ஒன்றை பதிவி செய்துள்ளார். அதில் இஸ்லாம் முறைப்படி குழந்தையின் வாயில் தேன் வைக்கப்படுகிறது.
மேலும், அறந்தாங்கி நிஷா தனது தமையனை பற்றியும் குறிபிட்டுள்ளார். பதிவில்," நா பெத்துபோட்ட பிள்ளை இனி அவள் தாய்மாமன் பொறுப்பு, எனது மகள் சஃபா ரியாஸ் என் தமையன் மாதிரி இருக்கானு எல்லாரும் சொல்றாங்க, அது எனக்கு சந்தோசமா இருக்கு, உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எனது மகளுக்கு தேவைப்படுகிறது" என்றும் கூறினார்.
இந்த வீடியோ தற்போது மிகவும் வைரலாகை வருகிறது. கடந்த 16 மணி நேரங்களில் கிட்டத்தட்ட 65,000 மக்கள் பார்த்திருக்கின்றனர்
,
முன்னதாக, குக் வித் கோமாளி’படப்பிடிப்பு தளத்திற்கு தனது குழந்தையை அலைந்து வந்திருந்தார் நிஷா. குழந்தை பிறந்ததும் ஓய்வெடுக்காமல், தனது வழக்கமான பணிகளில் அவர் கவனம் செலுத்தி வருவதை ஆச்சர்யமாக பார்க்கிறார்கள் ரசிகர்கள்.
https://www.instagram.com/tv/B7yPIDDhsaL/?utm_source=ig_embed
கர்ப்பமாக இருந்த போதிலும், பல நாள் கடின உழைப்பால் கிடைத்த இடத்தை விட்டு விட கூடாது என எண்ணி, காமெடி நிகழ்ச்சியிலும், தான் தொகுத்து வழங்கி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் தொடர்ந்து பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.