அறந்தாங்கி நிஷா கண்ணீர் வீடியோ: 'பொண்ணாப் பொறந்தா இதை தாங்கித்தான் ஆகணும்'
விஜய் டிவி பிரபலம் அறந்தாங்கி நிஷா தேம்பி தேம்பி அழும் மகிழ்ச்சியான தருணத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது.
விஜய் டிவி பிரபலம் அறந்தாங்கி நிஷா தேம்பி தேம்பி அழும் மகிழ்ச்சியான தருணத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது.
Tamil news, Tamil TV news, Tamil television news, Tamil video, Tamil viral video, Tamil trending video, aranthangi nisha marriage video, அறந்தாங்கி நிஷா தேம்பி அழும் வீடியோ, viral video, Vijay tv news, Vijay TV fame aranthangi nisha, Vijay Tv Aranthangi Nisha, Aranthai Nisha, Aranthangi Nisha tamil videos, தமிழ் வீடியோ, தமிழ் வைரல் வீடியோ, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, கலக்கப்போவது யாரு, aranthai nisha Instagram
விஜய் டிவி பிரபலம் அறந்தாங்கி நிஷா தேம்பி தேம்பி அழும் மகிழ்ச்சியான தருணத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது.
Advertisment
தமிழ் சினிமா உலகில் நடிகைகள் இடையே முன்னணி ஹீரோயினாக வேண்டும் என்கிற போட்டி இருக்கிற அளவுக்கு முன்னணி நகைச்சுவை நடிகையாக வேண்டும் என்ற போட்டி இருப்பதில்லை. நகைச்சுவை நடிகையாக வேண்டும் என்று யாரும் விரும்புவதும் இல்லை. அதே போல, தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஸ்டாண்ட் அப் காமெடி கலைஞர்களுக்கான இடம் கிடைத்தபோது பெரும்பாலும் ஆண்களே பங்கேற்றனர்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆண்கள் பலரும் பங்கேற்றபோது ஒரு பெண் கலைஞராக பங்கேற்று பிரபலமானார் அறந்தாங்கி நிஷா. விஜயின் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷா தனது நகைச்சுவைத் திறனை வெளிப்படுத்தி தனி முத்திரை பதித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தார்.
Advertisment
Advertisements
தனது அத்தை மகனை திருமணம் செய்துகொண்ட நிஷாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. நிஷாவுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அப்பா, அம்மா, கணவர், குழந்தைகள், தம்பி, அத்தை, மாமா என்று மகிழ்ச்சியான குடும்பமாக நிஷாவின் குடும்பம் அமைந்துள்ளது. நிஷா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரலமாகி பேரும் புகழும் பெற்றதற்கு அவருடைய குடும்பத்தினரின் ஒத்துழைப்பு முக்கிய காரணம்.
இந்த நிலையில், நிஷா தனது கல்யாண வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவைப் பற்றி நிஷா குறிப்பிடுகையில், “வேற வழி இல்லாம என்னோட கல்யாண வீடியோவை பார்த்தேன். எப்போ பார்த்தாலும் அழுகை தான் வருது. பொண்ணா பொறந்தா இதெல்லாம் கடந்து தான் போகணும்.” என்று தெரிவித்துள்ளார். கல்யாணத்தில் நிஷா தேம்பி தேம்பி அழும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், சிலர் அழாதீர்கள் என்று கூறி அவருக்கு ஆதரவாக கம்மெண்ட் செய்துள்ளனர். சிலர் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறி வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"