சின்னத்திரை நடத்திரமாக இருகும் அறந்தாகி நிஷா புதி வீடு கட்டியுள்ளார். இதற்கு அவர் அனைவருக்கும் கறி விருந்து கொடுத்திருக்கும் வீடியோவை அவரது யுடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.
விஜய் டீவியில் நடைபெற்ற காமெடி நிகழ்ச்சியில் கந்துக்கோண்டவர் அறந்தாகி நிஷா. இவர் பிக்பாஸ் நிகழ்சியிலும் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவரால் அதிக நாட்கள் நீடிக்க முடியவில்லை. இந்நிலையில் விஜய் டிவியின் பல்வேறு ரியாலிட்டி ஷோவில் அவர் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவர் புதிதாக வீடு கட்டியுள்ளார். வீட்டின் பால் காய்ச்சும் நிகழ்வு நடைபெற்றுள்ளதாக அவர் யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் . முதலில் குடும்பத்துடன் சேர்ந்து பால் காய்ச்சுகிறார் நிஷா. வழக்கம்போல், அவரது காமெடி பேச்சால் அனைவரும் கலாய்க்கிறார். தொடர்ந்து நிஷாவை வாழ்த்த குடும்ப உறுப்பினர்கள் வருகை தருகிறார்கள்.
அவர்களுடன் பேசும் நிஷா, குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துகொள்கிறார். மேலும் விருந்தினர்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது. ஆனால் நிஷாவுக்கு இன்னும் உணவு வரவில்லை என்று புலம்புகிறார். நிஷாவின் அம்மா, அவருக்கு ஊட்டும்போது, கண் கலங்குகிறார் நிஷா. அனைவருக்கும் மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவல், பீடா மற்றும் ஐஸ்கிரீம் வழங்கப்படுகிறது.