பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வடசென்னை ஐஸ்வர்யா ராஜேஷாக அறந்தாங்கி நிஷாவின் பெர்மான்ஸ்க்கு நெட்டிசன்கள் ரியாக்ட் செய்து வருகின்றனர்.
Advertisment
விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஷோவான பிக் பாஸ் ஸ்டார்களைக் கொண்டு, தற்போது பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் பிக் பாஸின் அனைத்து சீசன்களிலிருந்தும் போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் உள்ளனர்.
இந்த பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில், ஒரு ஜோடியாக விஜய் டிவியின் காமெடி நட்சத்திரங்கள் தாடி பாலாஜி மற்றும் நிஷா கலக்கி வருகின்றனர். பாலாஜி ஏற்கனவே தனது மனைவியுடன் ஜோடி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர். நிஷாவுக்கு இதுவே முதல் நடன நிகழ்ச்சி. இருவரும் தங்களது பலமான ஏரியாவான காமெடியை நடனத்துடன் சேர்த்து வழங்கி வருவது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் சில எபிஷோடுகள் ஒளிப்பரப்பான நிலையில் போட்டியாளர்கள் அடுத்தடுத்து, கொரோனா பாதிப்புக்கு ஆளான நிலையில் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கொரோனா பிரச்சனைகள் சரியான நிலையில் நிகழ்ச்சி மீண்டும் ஒளிப்பரப்பாக உள்ளது.
Advertisment
Advertisements
இதில் வருகின்ற, ஞாயிற்றுக்கிழமை ஒளிப்பரப்பாக உள்ள எபிஷோடுக்கான ப்ரோமோக்களை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் பாலாஜி மற்றும் நிஷா வடசென்னை பட பாடல்களுக்கு நடனமாடியுள்ளனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், “BB jodi, நீங்க நம்பித்தான் ஆகணும், நான்தான் வடச்சென்னை ஐஸ்வர்யா ராஜேஷ், சொல்றதுக்கு எனக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு, எவ்வளவோ பாத்துட்டீங்க இதையும் பார்த்துடுங்க” என பதிவிட்டுள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள் நிஷாவை கலாய்த்து வருகின்றனர். மேலும், நீங்க ஐஸ்வர்யா ராஜேஷ் என்றால் அப்ப பாலாஜி தனுஷா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னொரு நெட்டிசன் நயன்தாராவையே நம்பிட்டோம் இது ஐஸ்வர்யா ராஜேஷ் தானே ok ok என பதிவிட்டுள்ளார். சிலர் நீங்க நம்பிக்கையா பண்ணிக்கிட்டே இருங்க என நிஷாவுக்கு ஆதரவாகவும் பதிவிட்டுவருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil