தாலாட்டுக்கு தாளம் போடும் நிஷா மகள்; வைரல் வீடியோ

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலக்கிய அறந்தாங்கி நிஷாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழகிய பெண் குழந்தை பிறந்தது. பொது முடக்க காலத்தில் தனது குழந்தையை கவனித்துவரும் நிஷா, தனது மகளுக்கு தாலாட்டு பாட அவரது குழந்தை தாளம் போடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி…

By: May 30, 2020, 9:02:44 PM

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலக்கிய அறந்தாங்கி நிஷாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழகிய பெண் குழந்தை பிறந்தது. பொது முடக்க காலத்தில் தனது குழந்தையை கவனித்துவரும் நிஷா, தனது மகளுக்கு தாலாட்டு பாட அவரது குழந்தை தாளம் போடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் வெள்ளித்திரையிலும் சரி, சின்னத்திரையிலும் சரி எப்போதும் பெண் நகைச்சுவைக் கலைஞர்களுக்கு மட்டும் போட்டியே இருக்காது. ஏனென்றால், பெரும்பாலும் பெண்கள் நகைச்சுவை நடிகையாக விரும்புவது மிகவும் குறைவு. ஏனென்றால், நகைச்சுவை நடிகையாவது என்பது அவ்வளவு சுலபமல்ல.

தமிழ் சினிமாவில், மனோரமா, கோவை சரளா என தங்களுக்கென ஒரு நகைச்சுவை பாணியில் களம் இறங்கி பின்னர், குணச்சித்திர பாத்திரங்களிலும் வெற்றிக்கொடி நாட்டினர்.

அந்த வரிசையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று நிஜமாகவே கலக்கியவர் அறந்தாங்கி நிஷா. தனது அபாரமான நகைச்சுவை உணர்வாலும், உடனடியான கவுண்ட்டர் டயலாக், அபாரமான நகைச்சுவை நடிப்பு என கலக்குகிறார் அறந்தாங்கி நிஷா. இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மட்டுமில்லால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலக்குகிறார். அதோடு நிஷா அவரது கணவருடன் இணைந்து, மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியிலும் கலக்கி வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தாண்டி, ஆண் தேவை, மாரி 2 ஆகிய படங்களிலும் அறந்தாங்கி நிஷா நடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

En padalukku en magal safa Thalam. Kandipa avalukku unga blessing venum.

A post shared by Aranthai Nisha (@aranthainisha) on


நிஷாவுக்கு ஏற்கெனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், அவருக்கு கடந்த டிசம்பர் மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சஃபா என்று பெயரிட்டுள்ள நிஷா, கொரோனா பொது முடக்க காலத்தில் வீட்டில் தனது மகளுடன் செலவிட்டு வருகிறார். இந்த நிலையில், நிஷா தனது மகளுக்கு அழகான ஒரு தாலட்டு பாடல் பாடியுள்ளார். குழந்தை சஃபா அம்மா நிஷாவின் தாலாட்டு பாட அதற்கு அவரது மகள் சஃபா அழகாக தாளம் போடுகிறார்.

இந்த வீடியோ குறித்து நிஷா குறிப்பிடுகையில், என்பாடலுக்கு என் மகள் சஃபா தாளம். கண்டிப்பாக அவளுக்கு உங்களுடைய வாழ்த்து தேவை” என்ரு குறிப்பிட்டுள்ளார்.

நிஷா தாலாட்டுப் பாட, அவரது செல்ல மகள் சஃபா தாளம் போடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Aranthangi nisha singing to her daughter viral video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X