இனி டி.ஆர்.பி பிச்சிக்கிட்டு போகும்... பாரதி கண்ணம்மா சீரியலில் நுழைந்த அறந்தாங்கி நிஷா!

Aranthangi Nisha in bharathi kannamma serial; promo goes viral Tamil News: 'பாரதி கண்ணம்மா' சீரியலில் ‘அறந்தாங்கி’ நிஷா நடித்துள்ள ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில், சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Aranthangi Nisha in bharathi kannamma serial; promo goes viral Tamil News: 'பாரதி கண்ணம்மா' சீரியலில் ‘அறந்தாங்கி’ நிஷா நடித்துள்ள ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில், சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Aranthangi Nisha Tamil News: nisha enters in vijay tv’s bharathi kannamma serial

bharathi kannamma serial news update in tamil: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் ‘அறந்தாங்கி’ நிஷா. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் பிறந்து வளர்ந்த இவர் 13 வருடங்கள் பட்டிமன்றப் பேச்சாளராக வலம் வந்தார். பிறகு தான் விஜய் டியின் காமெடி ஷோக்களில் தோன்றினார்.

Advertisment
publive-image
அறந்தாங்கி நிஷா

நிஷா, பெண்களுக்கு காமெடி சாத்தியமாகுமா என்கிற கேள்வியையும், பெண்களுக்கும் நகைச்சுவைக்கும் இடைவெளி அதிகம் என்கிற கருத்தையும் உடைத்தவர். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஒரு கலக்கு கலக்கிய இவருக்கு தொடர்ந்து சினிமாவில் நடிக்கவும் வாய்ப்புகள் கிடைத்தன. குறிப்பாக, விஷால் நடித்த இரும்புத்திரை, நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, தனுஷ் நடித்த மாரி -2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

publive-image
அறந்தாங்கி நிஷா
Advertisment
Advertisements

கலக்கப்போவது யாரு சீசன் 5ல் ‘ரன்னர் அப்’ பட்டத்தைக் கைப்பற்றிய நிஷா, பிறகு விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டார். பின்னர், பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக களமிறங்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பிக் பாஸ் வீட்டில் தொகுப்பாளினி அர்ச்சனாவுக்கு நிஷாவுக்கு இடையில் நடந்த பிரச்சனைகள் பெரிதும் பேசப்பட்டன. அர்ச்சனாவின் அன்புதான் ஜெயிக்கும் டயலாக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

பிக் பாஸில் இருந்து வெளியேறிய பிறகு, தற்போது விஜய் டிவியின் முன்னணி ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார் நிஷா. இதற்கிடையில், அவர் முக்கிய சீரியலில் ஒன்றில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அந்த சீரியல் விஜய் டிவியின் 'பாரதி கண்ணம்மா' சீரியல் தான் என்று கூறப்பட்டன.

publive-image
அறந்தாங்கி நிஷா

இந்நிலையில், நிஷா 'பாரதி கண்ணம்மா' சீரியலில் நடித்துள்ள ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த ப்ரோமோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Aranthangi Nisha Tamil News: nisha enters in vijay tv’s bharathi kannamma serial
அறந்தாங்கி நிஷா

விஜய் டிவியின் முன்னணி சீரியல்களுள் ஒன்றான 'பாரதி கண்ணம்மா' சீரியலில் தற்போது சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமே இல்லாமல் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த சீரியலில் அன்றாட பல ட்விஸ்ட்கள் அரங்கேறி வருகிறன.

சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து நடிகை ரோஷினி ஹரிப்பிரியா விலகிய நிலையில், புதிய கண்ணம்மாவின் அறிமுகம் சீரியலுக்கு கிடைத்த வந்த வரவேற்பை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. கதையில் அரங்கேறி வரும் ட்விஸ்ட்கள் வேகத்தை தான் கூட்டியுள்ளன.

பாரதி மற்றும் கண்ணம்மாவின் விவாகரத்து வழக்கில் இடைக்காலத் தீர்ப்பு வந்த நிலையில், இருவரும் ஆறு மாத காலம் ஒன்றாக வாழ வேண்டும் என்று நீதிபதி அறிவித்தார். எனவே, தற்போது இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் நடக்கும் காட்சிகள் கலகலப்பாக இருந்துவரும் இந்த தருணத்தில், கண்ணம்மா பாரதியின் மருத்துவமனையில், அவரிடம் சிகிச்சைக்காக வருகிறார். ஆனால் கண்ணம்மா மீது இருக்கும் வெறுப்பின் காரணமாக அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு பாரதி மறுத்துவிடுகிறார்.

publive-image

இந்த நிலையில், கண்ணம்மாவிற்கு பாரதி சிகிச்சை அளிக்க மறுக்கக்கூடாது என்பதை அவருக்கு புரிய வைக்கும் ஒரு புதிய கேரக்டரில் அறந்தாங்கி நிஷா என்ட்ரி கொடுத்துள்ளார். அவரின் என்ட்ரி இன்னும் அதிக பார்வையாளர்களை கொண்டும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், நிஷாவின் வருகை சீரியலில் இன்னும் பல மாற்றத்தையும், ட்விஸ்ட்டையும் கொண்டுவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: