விஜய் டிவிக்கு ஒரு குட்டி ஆங்கர் தயார் – கலக்கப்போவது குட்டீஸ்க்கு இப்பவே கன்டெஸ்டண்ட் ரெடி

Vijay tv Aranathangi Nisha : விஜய் டிவி பிரபலம் அறந்தாங்கி நிஷாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதன்மூலம், விஜய் டிவிக்கு இப்பவே ஒரு குட்டி ஆங்கர் கிடைச்சுட்டாங்க...

By: Updated: December 30, 2019, 07:51:03 PM

விஜய் டிவி பிரபலம் அறந்தாங்கி நிஷாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதன்மூலம், விஜய் டிவிக்கு இப்பவே ஒரு குட்டி ஆங்கர் கிடைச்சுட்டாங்க…

2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்

குழந்தையின் வருகையை எதிர்நோக்கும் அறந்தாங்கி நிஜாவின் நிஜ கதை

விஜய் டிவி சேனலில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக அறிமுகமாகி, தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளினி, காமெடி நடிகை என, பல அவதாரங்கள் எடுத்து நிகழ்ச்சி பார்க்கும் அனைவரையும் சிரிக்க வைத்து கொண்டிருப்பவர் அறந்தாங்கி நிஷா.

திருமணம் முடிந்தபிறகே, அவர் விஜய் டிவி சேனலில் இணைந்திருந்த நிலையில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் பார்வையாளராக இவரது கணவரும் தொடர்ந்து பங்கேற்று வந்தார்.

கர்ப்பமாக இருந்த போதிலும், பல நாள் கடின உழைப்பால் கிடைத்த இடத்தை விட்டு விட கூடாது என எண்ணி, காமெடி நிகழ்ச்சியிலும், தான் தொகுத்து வழங்கி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் தொடர்ந்து பங்கேற்று வந்தார்.

சமீபத்தில் இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்தது. இந்நிலையில் தனக்கு அழகிய பெண் குழந்தை பிறந்த விஷயத்தை அறந்தாங்கி நிஷா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது… “எல்லாருக்கும் வணக்கம், எனக்கு பெண் குழந்தை பொறந்துருச்சு…… பாப்பாவின் பெயர் சஃபா ரியாஸ் என்று வச்சிருக்கோம். எல்லாரோட பிளெஸ்ஸிங் கண்டிப்பா அவளுக்கு வேண்டும். என தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள், நிஷாவுக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Aranthangi nisha vijay tv fame aranthangi nisha blessed a baby

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X