ஆரவ் ட்வீட் போட… ஓவியா பதில் சொல்ல… டிவிட்டரே களைக்கட்டுது

பிக் பாஸ் லவ் ஜோடி ஆரவும் ஓவியாவும் இருவரும் இணைந்து ராஜபீமா படத்தில் நடித்துள்ளதைப் படத்தின் ஹீரோ ஆரவ் உறுதிப்படுத்தியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவராலும் ரசிக்கப்பட்ட நபரான ஓவியா, காதல் வயப்பட்டு ஏமாற்றம் அடைந்ததால் போட்டியைவிட்டு வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதை வென்ற ஓவியா, நிகழ்ச்சியைவிட்டு வெளியேறிய பின்னர் மக்களிடம் பேராதரவு கிடைத்தது. ஓவியாவுக்கென இளைஞர்கள் தனி ஆர்மியை உருவாக்கிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இணைந்து நடிக்கும் ஓவியா – […]

arav and oviya, ஆரவ்
arav and oviya, ஆரவ்

பிக் பாஸ் லவ் ஜோடி ஆரவும் ஓவியாவும் இருவரும் இணைந்து ராஜபீமா படத்தில் நடித்துள்ளதைப் படத்தின் ஹீரோ ஆரவ் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவராலும் ரசிக்கப்பட்ட நபரான ஓவியா, காதல் வயப்பட்டு ஏமாற்றம் அடைந்ததால் போட்டியைவிட்டு வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதை வென்ற ஓவியா, நிகழ்ச்சியைவிட்டு வெளியேறிய பின்னர் மக்களிடம் பேராதரவு கிடைத்தது. ஓவியாவுக்கென இளைஞர்கள் தனி ஆர்மியை உருவாக்கிக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இணைந்து நடிக்கும் ஓவியா – ஆரவ்

ஓவியாவுடன் காதல் இல்லை, இருவரும் நல்ல நண்பர்கள் என்று ஆரவ் கூறினார். ஆனால் அவ்வப்போது ஓவியா – ஆரவ் சந்தித்துக்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இருப்பினும் இருவரும் ஏதேனும் ஒரு படத்தில் நடிப்பார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

arav and oviya, ஓவியா

இந்நிலையில் ஆரவ் நடிக்கும் ராஜபீமா படத்தில் ஓவியா நடித்துள்ளார். இது குறித்து ஆரவ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த ட்வீட்டில், “ ஒரே ஒரு பாடலுக்கு இருவரும் இணைந்து நடிக்கிறோம். ஓவியா ஆர்மிக்கு இது ஒரு நல்ல செய்தி. தயாராகுங்கள்” எனப் பதிவிட்டிருந்தார். இதற்கு ஓவியாவும் ட்வீட் செய்துள்ளார்.

அதில், “ உன்னுடன் இணைந்து நடித்ததில் எனக்கு மகிழ்ச்சி ஆரவ்” என்று ட்வீட்டிருக்கிறார்.பிக் பாஸ் சீசனிலேயே இருவரும் சேர மாட்டார்களா என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இது ஒரு விஷுவல் ட்ரீட்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Arav and oviya join together for a cameo role

Next Story
தளபதிக்கு கிடைத்தது மாபெரும் அங்கீகாரம்… நேரில் சென்று விருதுக்கு மரியாதை தந்த நடிகர் விஜய்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com