/tamil-ie/media/media_files/uploads/2019/05/aravind-swami.jpg)
Aravind Swami's Next with this controversial Director: ’செக்க சிவந்த வானம்’ திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் அரவிந்த் சாமி நிறையப் படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது கள்ளபார்ட், சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். அதோடு இவர் நடித்திருக்கும் நரகாசூரன் படத்தின் படபிடிப்பும் எப்போதோ முடிந்துவிட்டது.
இந்நிலையில் அடுத்தப் படத்தையும் தொடங்கிவிட்டார் அரவிந்த். சந்தோஷ் பி ஜெயக்குமார் இதனை இயக்குகிறார். இவர், ’ஹர ஹர மஹா தேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய படங்களை இயக்கி விமர்சனத்துக்குள்ளானார்.
Aravind swami begins his next with Iruttu araiyil murattu kuthu director
அதோடு, ஆர்யா - சாயிஷா ஆகியோரின் நடிப்பில் வெளியான, ‘கஜினிகாந்த்’ திரைப்படத்தையும் இயக்கினார்.
அரவிந்த் சாமி - சந்தோஷ் ஜெயக்குமார் இணையும் இந்தப் படத்தை எக்ஸெட்ரா எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. படத்திற்கு இசை டி.இமான்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பூஜை இன்று நடந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.