Advertisment
Presenting Partner
Desktop GIF

தங்கையுடன் ஜோடி போட்டு என்னா டான்ஸ்..! மூளை பிரச்னையில் இருந்து மீண்ட அர்ச்சனாவா இவர்?

Bigg Boss fame VJ Archana Chandhoke latest news in tamil: அர்ச்சனா தங்கை அனிதாவுடன் சேர்த்து நடனம் ஆடும் வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வரும் நிலையில், மூளை பிரச்னையில் இருந்து மீண்ட அர்ச்சனாவா இது? என பலர் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Archana Chandhoke Tamil News: Archana and her sis anitha dancing videos goes viral

Archana Chandhoke Tamil News: ஜீ தமிழ் டிவில் முன்னணி தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வந்தவர் அர்ச்சனா. இவர் விஜய் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாக கலந்து கொண்டார். துவக்கத்தில் ரசிகர்கள் மத்தியிலும், போட்டியாளர்கள் மத்தியிலும் அன்பு அன்னையாக மாறியிருந்த இவர், கொஞ்ச நாட்களிலே கடுமையாக விமர்சிக்கப்பட்டார். தவிர இவர் நிஷாவுடன் சேர்ந்து ஆடிய "அன்பு தான் ஜெயிக்கும்" கேம் ரசிகர்களிடையே விவாதத்தை கிளப்பியிருந்தது.

Advertisment
publive-image

இதனால் அவருக்கு எதிராக சமூக ஊடகங்களில் மீம்கள் மற்றும் ட்ரோல்கள் என பறந்தன. அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், தனது மகள் ஸாராவுடன் இணைந்து யூடியூப்பில் வீடியோக்களை பதிவேற்றி வந்தார். இவற்றில் சில நெட்டிசன்களின் கவனம் ஈர்க்க வழக்கம் போல் ட்ரோல் செய்து வைரலாக்க தொடங்கினர். அதிலும் குறிப்பாக 'பாத்ரூம் டூர்' வீடியோ படுபயங்கரமாய் கலாய்க்கப்பட்டது.

publive-image

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பரவலாக அறியப்பட்ட அர்ச்சனா சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் மகள் ஸாராவுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவருக்கு பொருத்தமான ரோல் வழங்கப்பட்டுள்ளதாக இயக்குநர் நெல்சனுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

publive-image

இதற்கிடையில், தொகுப்பாளினி அர்ச்சனா திடீரென மூளையில் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கலகலவென பேசும் அர்ச்சனாவுக்கு ஏன் இப்படியொரு நிலைமை? என அவரது ரசிகர்கள் துடித்துப்போயினர். மேலும், அவர் விரைவிலே பூரண குணம் பெற வேண்டும் எனவும் பிரார்த்தனை மேற்கொண்டனர். அவரும் கடும் போராட்டத்திற்கு பிறகு மீண்டுள்ளார்.

publive-image

தற்போது விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களை எப்போதும் போல் எனர்ஜியாகவும், கலகலப்பாகவும் தொகுத்து வருகிறார். இந்நிலையில், அர்ச்சனா தங்கை அனிதாவுடன் சேர்த்து நடனம் ஆடும் வீடியோக்களை அன்றாட தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த நமது நெட்டிசன்கள் மூளை பிரச்னையில் இருந்து மீண்ட அர்ச்சனாவா இது? என்று வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil Zee Tamil Vijay Tv Bigg Boss Bigboss Archana Archana Vj Archana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment