/tamil-ie/media/media_files/uploads/2019/12/ArjunDas_Thalapathy64.jpg)
அர்ஜூன் தாஸ்
Thalapathy 64: தலைநகர் டெல்லியில் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ‘தளபதி 64’ படப்பிடிப்பு நடந்து முடிந்தது. தற்போது சென்னை திரும்பியிருக்கும்ப் படக்குழு விரைவில் கர்நாடகாவின் ஷிமோகாவில் மற்றொரு நீண்ட ஷெட்யூலை தொடங்கவுள்ளது. இந்த ஷெட்யூல் மிக முக்கியமானதாக இருக்கும், ஏனெனில் நடிகர் விஜய் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இங்கு தான் படமாக்கப்படவிருக்கிறது.
தேதிகள் இல்லாதகாரணத்தால், மலையாள நட்சத்திரம் அந்தோணி வர்கீஸ் தளபதி 64 படத்திலிருந்து விலகினார். இதனால் அந்த கதாபாத்திரத்திற்கு அர்ஜூன் தாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 'கைதி' படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரிடமும் அப்ளாஸ் வாங்கியிருந்தார் அர்ஜூன்.
— Arjun (@iam_arjundas) December 1, 2019
இந்நிலையில் தளபதி 64-ல் தான் இடம்பெற்றிருப்பதைப் பற்றி ஓர் உணர்வுப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளார் அர்ஜூன். “இந்த செய்தி வந்ததிலிருந்து எனக்கு பேச்சே வரவில்லை. முழுமனதுடன் ஏதாவது நடக்க வேண்டும் என விரும்பினால், உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற இந்த பிரபஞ்சமே அதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தி விடும். விஜய் சார், விஜய் சேதுபதி சாருடன் பணிபுரிவது மிகுந்த ஆர்வத்தைக் கொடுக்கிறது. என்னைப் போன்ற புதியவர்களுக்கு இது பெரிய உந்துதலைக் கொடுக்கும். இந்த நேரத்தில், கைதி திரைப்படம் வெளியான போதிலிருந்து எனக்கு நிறைய அன்பையும் ஆதரவையும் அளித்துவரும் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 64 படத்தை, எக்ஸ்.பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில், விஜய், விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் கோடை விடுமுறையை முன்னிட்டு 2020-ல் வெளியாகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.