அநீதி படம் வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி; வசந்த பாலன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்பு; கோவையில் அர்ஜூன் தாஸ் பேச்சு
வசந்தபாலன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்புள்ளதாக நடிகர் அர்ஜூன் தாஸ் கோவையில் தெரிவித்துள்ளார்.
Advertisment
வசந்தபாலன் இயக்கத்தில் கைதி, மாஸ்டர் படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் நாயகன், நாயகியாக நடித்துள்ள அநீதி படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.
இந்நிலையில் கோவை அவினாசி சாலையில் உள்ள பிராட்வே சினிமாஸ் தியேட்டருக்கு வந்த அநீதி பட நாயகன் அர்ஜூன் தாஸ், நாயகி துஷாரா விஜயன் ரசிகர்களை நேரில் சந்தித்தனர்.
Advertisment
Advertisements
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் தாஸ் கூறியதாவது, அநீதி படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் அதிக காட்சிகள் ஓடி வருவதாக தெரிவித்த அவர் இதற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
வசந்தபாலன் இயக்கம், இயக்குனர் சங்கர் தயாரிப்பு, ஜி.வி.பிரகாஷ்குமார் இசை என பெரிய கூட்டணிக்கு கட்டாயம் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதை தாம் எதிர்பார்த்ததாகவும், குறிப்பாக உணவு விநியோகம் செய்யும் ஊழியர்களுக்கு தமது நன்றியை தெரிவிப்பதாகவும் அர்ஜூன் தாஸ் தெரிவித்தார்.
மேலும் புதிய பரிணாமத்தில் மாறுதலான கதாபாத்திரத்தில் தோன்றியது மகிழ்ச்சியே எனவும், மீண்டும் வசந்தபாலன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் அர்ஜுன் தாஸ் தெரிவித்தார்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil