Advertisment

சாக்லேட் பாயாக மாறிய அர்ஜுன் ராம்பால்: காதலி மீண்டும் கர்ப்பம்

அர்ஜுன் ராம்பாலின் காதலி கேப்ரியல்லா டெமெட்ரியாஅர்ஜுன் ராம்பாலின் காதலி கேப்ரியல்லா டெமெட்ரியாட்ஸ் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார்.ட்ஸ் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Arjun Rampal living Together Girlfriend wait 2nd baby

அர்ஜுன் ராம்பால் லிவ்விங் டுகெதர் காதலி கேப்ரியல்லா டெமெட்ரியாட்ஸ்

பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால்- கேப்ரியல்லா டெமெட்ரியாட்ஸ் என்பவருடன் 2018ஆம் ஆண்டு முதல் பழகிவருகிறார். இவர்கள் திருமணம் செய்யாமல் லிவ்விங் டுகெதர் முறையில் சேர்ந்து வாழ்கின்றனர்.
இந்த நிலையில் முதல் குழந்தையை 2019 ஜூலையில் பெற்று எடுத்தனர். தற்போது கேப்ரியல்லா டெமெட்ரியாட்ஸ் மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார்.

Advertisment

இந்தப் புகைப்படங்களை கேப்ரியல்லா டெமெட்ரியாட்ஸ் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதைப் பார்த்த ரசிகர்கள், எப்போ சார் கல்யாணம் பண்ணிக்க போறீங்க என அர்ஜுன் ராம்பாலை குடைந்தெடுத்து வருகின்றனர்.

பாலிவுட்டில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என பல வேடங்களில் நடித்துள்ள ராம்பால், திருமணமாகி முதல் மனைவியை பிரிந்தவர் ஆவார்.

இவரது முதல் மனைவி மெஹர் ஜெசியா ஆவார். இருவரும் 20 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில் விவாகரத்து பெற்றனர். இந்த ஜோடிக்கு மஹிகா, மைரா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bollywood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment