/tamil-ie/media/media_files/uploads/2019/05/Kabir-Singh.jpg)
Arjun Reddy Hindi Remake Kabir Singh Trailer Released today
Arjun Reddy Hindi Remake Kabir Singh Trailer Released today : 2017ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளையும் பாராட்டுகளையும் ஒருங்கே பெற்ற படம் தான் அர்ஜூன் ரெட்டி. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் வெளியானது இந்த படம்.
போதைப் பொருட்களின் பயன்பாடு மற்றும் எல்லை மீறிய காதல் காட்சிகளுக்காக கடுமையான விமர்சனங்கள் இந்த படத்தின் மீது முன்வைக்கப்பட்டிருந்தாலும் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பிற்காக பெரிதும் புகழப்பட்டதும் உண்மை.
தமிழில் வர்மா என்ற பெயரில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடிப்பில், இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் முழு படமும் எடுக்க்கப்பட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு சிக்கல்கள் காரணமாக படம் முழுவதும் கைவிடப்பட்டதோடு, ஆதித்யவர்மா என்ற பெயரில் மறுபடியும் தமிழில் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தெலுங்கில் அர்ஜூன் ரெட்டியை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் இந்தியில் இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஷாகித் கபூர், க்யாரா அத்வானி நடிப்பில் கபிர் சிங் என்ற பெயரில் இந்த படம் உருவாகியுள்ளது. இதன் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Arjun Reddy Hindi Remake Kabir Singh Trailer Released today
ஒளிபதிவு : சந்தான கிருஷ்ணன் ரவிச்சந்திரன்
இசை: மித்தூன், அமால் மாலிக், விஷால் மிஷ்ரா, சாசெட் - பரம்பரா
வெளியீடு : இந்த படம் ஜூன் 21ம் தேதி திரைக்கு வருகிறது !
மேலும் படிக்க : பார்த்தீபன் படத்தை உல்டா செய்து…. அவரையே நடிக்க வைத்து… அடடே ‘அயோக்யா’
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.