Advertisment

25 ஆண்டுகளுக்கு பின் இணைந்த இரு லெஜண்ட்ஸ் : ஏ.ஆர்.ரஹ்மான் - பிரபுதேவா கூட்டணியில் புது படம்

தற்காலிகமாக ஏ.ஆர்.ஆர்.பி.டி 6 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை, அறிமுக இயக்குனர் மனோஜ் எம்.எஸ் இயக்க உள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Prabhu dev ARR

25 ஆண்டுகளுக்கு பிறகு பிரபுதேவாவும், ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்துள்ளனர்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் 25 வருடங்களுக்கு பிறகு பிரபுதேவாவின் படத்திற்கு இசையமைக்க கமிட் ஆகியுள்ளார்.

Advertisment

இந்திய சினிமாவில், நடிகர், டான்சர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் பிரபுதேவா. தற்போது விஜய் நடிப்பில் தயாராகி வரும் கோட் படத்தில் நடித்து வரும் இவர் தற்போது புதிய படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். தற்காலிகமாக ஏ.ஆர்.ஆர்.பி.டி 6 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை, அறிமுக இயக்குனர் மனோஜ் எம்.எஸ் இயக்க உள்ளார்.

இப்படத்தில் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப், சுஷ்மிதா நாயக், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், சிங்கம் புலி, லொள்ளு சபா சுவாமிநாதன் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படத்தின் டைட்டில் போஸ்டரை படத்தை தயாரிக்கும் பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் அனூப் ஷைலஜா மற்றும் எடிட்டர் ரேமண்ட் டெரிக் க்ரஸ்டா ஆகியோர் படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒரு பகுதியாக உள்ளனர். விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்திற்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். 1993-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் படத்தில் அர்ஜூன் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு ,ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில், பிரபுதேவா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

அதன்பிறகு 1994-ம்  ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற "பேட்டை ராப்" மற்றும் "டேக் இட் ஈஸி ஊர்வசி" போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து லவ் பேட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சாரா கனவு ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றினர்.

ஏ.ஆர்.ரஹ்மான் – பிரபுதேவா கூட்டணியில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், கடைசியாக மின்சார கனவு படத்தல் இணைந்திருந்தனர். அதன்பிறகு 25 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Prabhu Deva Ar Rahman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment