/indian-express-tamil/media/media_files/2025/09/01/screenshot-2025-09-01-152559-2025-09-01-15-26-16.jpg)
சின்னத்திரையும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பிரபலமான அருண் மற்றும் அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ளதாக அவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து, சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர். விரைவில் அவர்கள் திருமணம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து, ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை அனுப்பி வருகின்றனர்.
இது தொடர்பான அருண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இரண்டு ஆன்மாக்கள்.. ஒரே இதயம்.. எல்லையில்லா அன்பு. என்னவளை கண்டறிந்துவிட்டேன். எங்களின் பயணம் தொடங்கியது” என பதிவிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ என்ற பிரபல சீரியலில் நாயகனாக நடித்த அருண் பிரசாத், தனது திறமையால் ரசிகர்களுக்கு மனம் பிடித்தவர். இந்த தொடர் மூலம் இவர் அதிக புகழை பெற்ற பின்னர், ‘பாண்டியன் ஸ்டோர்’, ‘ராஜா ராணி’, மற்றும் ‘கனா காணும் காலங்கள்’ போன்ற வெற்றி பெற்ற சீரியல்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டு ரசிகர்களிடையே தனக்கென ஒரு வலுவான அடையாளத்தை ஏற்படுத்தினார்.
மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் கலந்துகொண்டு, அங்கு தனது உண்மையான தன்மையால் மற்றும் திறமையான செயல்பாடுகளால் பலரின் மனதை வென்று பாராட்டுகளை பெற்றார். இவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில்துறையில் நிகழ்ந்த முன்னேற்றங்கள் தற்போது அதிக கவனத்தையும் ரசிகர்களின் அன்பையும் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
அப்போதே, பிக்பாஸ் வீட்டிற்குள் நண்பராகச் சென்று, அருணுக்கு ஆதரவு கொடுத்த அர்ச்சனா, அதன் மூலம் தங்களது காதலையும் ரசிகர்களுக்கு உறுதிப்படுத்தினார். பிக்பாஸ் மூலம் உருவான இந்த ரியல் செலிபிரிட்டி ஜோடி, தற்போது தங்களது திருமண பந்தத்தில் இணையவுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ சீரியலில் வில்லி வேடத்தில் அறிமுகமான அர்ச்சனா, இந்த சீரியலின் மூலம் ரசிகர்களிடம் பரிச்சயமாகவும் பிரபலமாகவும் ஆனார். தனது வில்லி குணாதிசயத்தால் சிலருக்கு எரிச்சல் ஏற்பட்டதாலும், இயல்பான மற்றும் திறமையான நடிப்பால் நல்ல மதிப்பீடுகளையும் பெற்றார். இந்த சீரியல் அவரது வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையாகவும் விளங்கியது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் பரவலான கவனத்தை ஈர்த்தார் அர்ச்சனா. வைல்ட் கார்ட் போட்டியாளராக உள்ளே வந்த அவர், துவக்கத்தில் பலரால் நிராகரிக்கப்பட்டார். ஆனால், சக போட்டியாளரான பிரதீப் வெளியேற்றப்பட்டபோது, அதற்கு எதிராகத் துணிச்சலாகப் பேசியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றார்.
அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னரே, அருணுக்கும் அர்ச்சனாவுக்கும் காதல் இருப்பதாக வதந்திகள் பரவின. இருவரும் இந்த வதந்திகள் குறித்துப் பெரிதாக வாய் திறக்கவில்லை. இந்நிலையில் இருவரும் அதிகாரபூர்வமாக தங்களது திருமணத்தை அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.