அருண் அவுட்…அசீம் இன்…பரபரப்பில் ‘பூவே உனக்காக’ சீரியல்!

2020-ல் கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பு தடைபட, சீரியல்கள் ரிப்பீட் செய்யப்பட்டு வந்தன. ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் அளிக்கப்பட, சன் டிவியில் ‘பூவே உனக்காக’ சீரியல் மாஸ் எண்ட்ரி ஆனது. தற்போது, 250 எபிசோடுகளுக்கும் மேல் ஒளிபரப்பாகி வருகிறது.

Poovee Unakkaga Azeem as Kathir Sun Tv Serial Update News in Tamil : சினிமா திரைப்படங்களின் பெயர்களில் வெளியாகும் டிவி சீரியல்கள் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. சன் டிவி மற்றும் விஜய் டிவி யில் போட்டிப் போட்டு சினிமா படங்கள் பெயர்களை சீரியலுக்கு சூட்டி வருகின்றனர். வானத்தைப் போல, பூவே உனக்காக, ரோஜா என தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் வரிசையில் இன்னும் எத்தனை சீரியல்கள் வர இருக்கின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக திரைப்படத்தை போலவே, சன் டிவியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக சீரியலும் மாஸ் ஹிட் அடித்து வருகிறது.

2020-ல் கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பு தடைபட, சீரியல்கள் ரிப்பீட் செய்யப்பட்டு வந்தன. ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் அளிக்கப்பட, சன் டிவியில் ‘பூவே உனக்காக’ சீரியல் மாஸ் எண்ட்ரி ஆனது. தற்போது, 250 எபிசோடுகளுக்கும் மேல் ஒளிபரப்பாகி வருகிறது. சீரியலின் நாயகனான கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அருண் நடித்து வருகிறார். சில விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான அருணுக்கு, பூவே உனக்காக தான் முதல் சீரியல். பூவே உனக்காக அருண் ரோலுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்க, அருணுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அருணின் இன்ஸ்டாகிராம் பதிவில், பூவே உனக்காக சீரியலை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார். ‘ரசிகர்களின் ஆதரவு இல்லை என்றால், இவ்வளவு பெரிய வரவேற்பை பெற்றிருக்க இயலாது. இனிமேல் என்னை கதிராக நீங்கள் பார்க்க இயலாது. விரைவில் என்னிடமிருந்து நல்ல செய்தியை நீங்கள் எதிர்பார்க்கலாம்’ என பதிவிட்டிருந்தார். அருணின் பதிவை தொடர்ந்து, பூவே உனக்காக சீரியல் ரசிகர்கள் ஷாக் ஆக, உடன் நடித்த ராதிகா ப்ரீத்தி, ‘வெரி ஷாக்கிங் நியூஸ்’ என தனது உணர்வை பதிவிட்டிருந்தார்.

பூவே உனக்காக சீரியலில் இருந்து அருண் வெளியேறியது தொடர்பான பரபரப்புகள் அடங்குவதற்குள், அருணுக்கு பதிலாக கதிராக யார் நடிப்பது என்ற பேச்சுகளும் வைரலாகி வந்தன. இந்த நிலையில், வம்சம் சீரியல் நடிகர் ஹனீஷ் அரவிந்த், கதிர் ரோலில் நடிக்க உள்ளார் என்ற பேச்சுகள் அடிப்பட தொடங்கின. இந்த நிலையில், தற்போது சன் டிவி பிரபலம் ஒருவர் பூவே உனக்காக கதாநாயகனாக கமிட்டாகி இருக்கிறார்.

சன் மியூசிக் தொலைக்காட்சியிக் வி.ஜே.வாக சின்னத்திரை வாழ்வை தொடர்ந்த அசீம், விகடன் தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான ‘பிரியமானவள்’ சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமானவர். அதன் பிறகு, சன் டிவி யில் இருந்து விலகி, விஜய் டிவி யில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு போன்ற தொடர்களில் நடித்தார். தற்போது, மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக தொடரில் இணைய இருக்கிறார்.

பிக்பாஸ் சீசன் 4-ல் அசீம் பங்கு பெறுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், ஷிவானிக்கும் இவருக்குமான காதல் விவகாரத்தால் அது தடைப்பட்டது. கொரோனாவால் விஜய் டிவி யின் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஆரம்பிக்கப்படாமல் இருக்கு, வாய்ப்புகளுக்காக காத்திருந்த அசீமிற்கு பூவே உனக்காக சீரியல் வாய்ப்பளித்துள்ளதோடு, தாய் வீடான சன் டிவியிலும் அசீம் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். இந்த நிலையில், அசீம் இன், அருண் அவுட் என சீரியல் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Arun left poovee unakkaga sun tv serial priyamanaval fame azeem entry fans reactions

Next Story
ரோஜா சீரியலுக்கு திரும்பி வரும் ஐஸ்வர்யா… சீரியலில் அடுத்த ட்விஸ்ட்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express