துருவங்கள் 16 என்ற படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குநர் கார்த்திக் நரேன்.
அடுத்ததாக இவர், அரவிந்த் சாமி, சந்திப் கிஷன், இந்திரஜித், ஷ்ரேயா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்களை வைத்து ’நரகாசூரன்’ என்ற படத்தை 2017, செப்டம்பரில் துவங்கினார்.
படபிடிப்பு முடிந்த நிலையில், ரிலீஸ் செய்வதில் தயாரிப்பாளர் கெளதம் மேனனுக்கும், கார்த்திக்குக்கும் பிரச்னை வெடித்தது. இதனைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் பொறுப்பிலிருந்து விலகினார் கெளதம் மேனன்.
தணிக்கை செய்யப்பட்டிருக்கும் இப்படம் எப்போது வெளியாகுமென்றே தெரியவில்லை.
இதற்கிடையே தனது சொந்த பேனரில் ’நாடக மேடை’ என்ற படத்தையும், விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் சிம்புவை வைத்து ஒரு படத்தையும் இயக்குகிறார் கார்த்திக்.
இந்நிலையில் தற்போது நான்காவதாக ஒரு படத்தை இயக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். தடம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அருண் விஜய் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
அருண் விஜய் தொடர்ந்து க்ரைம் திரில்லர் படங்களில் நடித்து வருகிறார். கார்த்திக் நரேனும் க்ரைம் திரில்லர் படம் எடுப்பதில் ஆர்வம் மிகுந்தவர் என்பதால், இவர்கள் இணையும் இந்தப் புதிய படமும் ‘க்ரைம் த்ரில்லர்’ களத்தில் அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Arun vijays next with director karthick naren
முதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்
புலி எப்போதும் இப்படி கோபத்தை கட்டுப்படுத்தாது: எச்சரிக்கை வீடியோ
காயமடைந்தாலும் விளையாட தயாராக இருந்தேன் : மனம் திறந்த ஆல்ரவுண்டர் ஜடேஜா
பிப்.18 முதல் ஆன்லைன் வகுப்பு? தெளிவு படுத்துமா அண்ணா பல்கலைக்கழகம்?
ஆள் துணையுடன் சசிகலா எழுந்து நடக்கிறார்: லேட்டஸ்ட் மெடிக்கல் ரிப்போர்ட்