Aruvam in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான சித்தார்த் கேத்ரின் தெரெஸாவின் ’அருவம்’
Aruvam Full Movie Leaked in Tamilrockers: சித்தார்த் சீரியஸாக பேசும், “என் சாவுல கூட கலப்படம் இருக்கக் கூடாது” போன்ற வசனங்கள் நமக்கு வேடிக்கையாக இருக்கின்றன.
Aruvam Full Movie Leaked in Tamilrockers for Free Download: நடிகர் சித்தார்த் மற்றும் கேத்தரின் தெரெஸா நடிப்பில் வெளியான ’அருவம்’ திரைப்படம் சட்டவிரோதமான முறையில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. அறிமுக இயக்குநர் சாய் சேகர் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில், சதீஷ் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
Advertisment
ஹாரர் மற்றும் திரில்லர் களத்தில் இயக்கப்பட்டுள்ள அருவம் படத்தில், சித்தார்த் மற்றும் கேத்தரின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.
திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வெப் சிரீஸ்கள் என எதையுமே தவறாமல் இணையத்தில் கசிய விட்டு பிரபலமானவர்கள் தமிழ்ராக்கர்ஸ். அதோடு, அதிக கருத்தாழம் மிக்க படங்களைக் கூட வெளியான உடனேயே தங்களது இணையத்தில் லீக் செய்து விடுகிறார்கள். சமீபத்தில், சென்னை உயர்நீதிமன்றம் தமிழ் ராக்கர்ஸுக்கு எதிராக தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் தங்களது வலைதள முகவரியையும், அடிக்கடி மாற்றிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
’அருவம்’ படத்தைப் பொறுத்தவரை, இந்தியன் எக்ஸ்பிரஸின் எஸ்.சுபகீர்த்தனா ஒன்றரை ஸ்டார் கொடுத்திருந்தார். "மோசமாக எழுதப்பட்ட படம். சித்தார்த் சீரியஸாக பேசும், “என் சாவுல கூட கலப்படம் இருக்கக் கூடாது” போன்ற வசனங்கள் நமக்கு வேடிக்கையாக இருக்கின்றன. அதனால் அருவம் படத்தில் உணர்வுப்பூர்வமாக நம்மால் இணைய முடியவில்லை. நிறைய இடங்களில், கதாபாத்திரங்களைப் புரிந்துகொள்வதற்குப் பதிலாக, அவர்களைப் பார்த்து சிரிக்க தோன்றுகிறது. கார்ப்பரேட் பேராசை மற்றும் உணவு கலப்படம் பற்றி அருவம் பேசினாலும், அது சொல்லவரும் ‘செய்தியை’ ஒன்றன்பின் ஒன்றாக அனுப்புவது நமக்கு சலிப்பைத் தருகிறது.
மோசமாகச் செய்த சிஜி வேலையையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஒரு காட்சியில், கேத்தரின் தெரெசா தன்னை மஞ்சள் கயிறுகளால் கவர் செய்துக் கொள்வார். அந்த இடத்தில் அவரை ‘சக்திவாய்ந்தவராக’ பார்க்க வேண்டும். ஆனால் இங்கு சிரிப்பு தான் வருகிறது. பெரும்பாலான இடங்களில், கேத்தரினின் எக்ஸ்பிரஷன்கள் எரிச்சலூட்டக் கூடியவையாக இருக்கின்றன” எனக் குறிப்பிட்டிருந்தார்.