Advertisment

ரம்யா பாண்டியனுக்கு ‘டஃப்’ கொடுத்த அதிதி பாலன் - படங்கள் உள்ளே

படங்களைப் பார்த்த சில ரசிகர்கள், “நீங்களும் இப்படியா” என்ற ரீதியில் கமெண்ட் செய்திருந்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Aditi Balan Photo gallery

Aditi Balan Photo gallery

Aditi Balan Latest Images: கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘அருவி’ திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்துடன்வெளியானது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவியாளராக இருந்த அருண் பிரபு புருஷோத்தமன் அந்தப் படத்தை இயக்கியிருந்தார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்த ’அருவி’ படத்தில் அருவி என்ற கதாபாத்திரத்தில் நடிகை அதிதி பாலன் நடித்திருந்தார்.

Advertisment

எதேச்சையாக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வு, அவளை எந்தளவுக்கு ஆளக்குகிறது என்பதை, உணர்வுப்பூர்வமாக படமாக்கியிருந்தார் இயக்குநர். அருவி கதாபாத்திரத்தில் நடிகை அதிதி பாலன் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். சிறந்த நடிப்புக்காக பல விருதுகளையும் வாங்கினார். அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ படத்தில் த்ரிஷாவின் தோழியாக நடித்திருந்தார் அதிதி. இருப்பினும் அருவி திரைப்படம் தான் அவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது.

Adithi Balan Images வாவ் படம்...

Adithi Balan Images சோம்பல் முறித்தல்..

Adithi Balan Images மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே...

Adithi Balan Images புன்னகையுடன் அதிதி

Adithi Balan Images நேச்சுரல் பியூட்டி...

Aditi Balan Photo gallery அதிதி பாலனின் பதில்

இந்நிலையில், அவ்வப்போது ஃபோட்டோஷூட் நடத்தி இணையத்தில் உலவ விடும் நடிகைகள் பட்டியலில், அதிதியும் தற்போது இணைந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னால், இணையத்தில் வைரலான ரம்யா பாண்டியனுக்கு, பயங்கர போட்டியாக மஞ்சள் நிற சேலையில் எடுத்த படங்களை, தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் அதிதி.

அந்தப் படங்களைப் பார்த்த சில ரசிகர்கள், “நீங்களும் இப்படியா” என்ற ரீதியில் கமெண்ட் செய்திருந்தனர். அவர்களுக்கு “தயவுசெஞ்சு வளருங்க” என அதிதியின் தீவிர விசிறிகள் அறிவுரை கூறி வருகின்றனர்.

 

 

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment