ஐதராபாத்தில் நடிகை சாயிஷாவுடன் ஆர்யா திருமணம் நடைபெற இருக்கிறது. இத்திருமணத்தின் சங்கீத் நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வெளியானது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான ஆர்யா நடிகை சாயீஷாவை காதலித்து திருமணம் செய்ய உள்ளார். இவர்களின் திருமணம் இன்று ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இவர்களின் திருமண வரவேற்பை நிகழ்ச்சியும் சத்தமில்லாமல் நடந்துள்ளது. இதில் ஆர்யா சாயீஷாவின் உறவினர்களும் சில திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
சாயிஷா – ஆர்யா திருமணம்
குறிப்பாக பாலிவுட் பிரபல நடிகரான சஞ்சய் தத் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் தனது சங்கீத் நிகழ்ச்சியில் சாயிஷா நடமாடும் வீடியோ இணையத்தளம் முழுவதும் வைரலாகி வருகிறது.