/tamil-ie/media/media_files/uploads/2019/03/Arya-Sayyesha-Reception.jpg)
Arya Sayyesha Reception
Arya Sayyesha Reception Photos : ஆர்யா - சாயிஷா திருமணம் வெகு விமர்சையாக சென்னையில் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்தபோது காதல் வயப்பட்டனர். இருவரின் பெற்றோர்களும் இந்த காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதை அடுத்து இவர்களது திருமணம் கடந்த வாரம் ஐதராபாத்தில் ஆடம்பரமாக நடந்தது. இந்த திருமணத்தில் பாலிவுட், டோலிவுட், கோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
Arya Sayyesha Reception : ஆர்யா சாயிஷா ரிசப்ஷன்
இந்த நிலையில் ஆர்யா-சாயிஷா ரிசப்சன் இன்று சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், பி.ஆர்.ஓக்கள் உள்பட பல திரையுலகினர் கலந்து கொண்டு நட்சத்திர தம்பதிகளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.