ரசிகர்கள் வெகுநாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நடிகர் ஆர்யாவின் திருமணம் கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடந்தது.
‘கஜினிகாந்த்’ படத்தில் தன்னுடன் நடித்த சாயிஷாவை அவர் மணந்துள்ளார். இவர்களின் திருமண அறிவிப்பு வெளியானதிலிருந்து இணையத்தில் இவர்களைப் பற்றிய செய்திகளும், படங்களும் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் ஹனிமூனில் எடுத்துக் கொண்ட சில படங்களை தற்போது சாயிஷா அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Soaking in the sun with my love! ☀️
Pic courtesy- Husband @arya_offl ????????????#honeymoon pic.twitter.com/FNjYBVG3eY— Sayyeshaa (@sayyeshaa) 21 March 2019
அதற்கு, ‘சோக்கிங் இன் த சன் வித் மை லவ் எனவும்’ கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்தப் படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தற்போது இயக்குநர் கே.வி.ஆனந்தின் ‘காப்பான்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர்கள், இயக்குநர் சக்தி செளந்திரராஜனின் ’டெடி’ படத்திலும் ஜோடியாக நடிக்கிறார்கள். இதனை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.