Advertisment
Presenting Partner
Desktop GIF

நெருக்கம் காட்டும் அசல் – நிவாஷினி : பிக்பாஸ் வீட்டில் தொடங்கிய காதல் கதை

Asal kolaar and Nivashini are rumored to be in love here, Love in Bigg Boss Tamil 6? : நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் வழக்கத்திற்கு மாறாக பல புதுமுகங்கள் பங்கேற்றுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நெருக்கம் காட்டும் அசல் – நிவாஷினி : பிக்பாஸ் வீட்டில் தொடங்கிய காதல் கதை

Bigg Boss 6

Asal kolaar and Nivashini Love track started in Bigg Boss house : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் முதல் காதல் ஜேடியாக அசல் கொலார் நிவாஷினி ஆகியோர் இருப்பதாக நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

Advertisment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ந் தேதி தொடங்கியது. வழக்கம்போல் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் வழக்கத்திற்கு மாறாக பல புதுமுகங்கள் பங்கேற்றுள்ளனர். இதில் முதல் நாளில் இருந்தே டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார்.

ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை மற்ற யாரும் பிரபலமாக பேசப்படவில்லை என்று சொல்லாம். ரசிகர்களின் பார்வை ஜி.பி.முத்து மீது மட்டுமே இருந்தது. அதற்கு ஏற்றார்போல் பிக்பாஸ் வீட்டை தனது சொந்த வீடு என்பது போல் நினைத்துக்கொண்டு ஜி.பி.முத்து செய்த செயல்கள் அனைத்தும் பாராட்டுக்களை பெற்றது. ஆனால் கடந்த வாரம் தனது மகனுக்கு உடல்நிலை சரியில் என்று கூறி ஜி.பி.முத்து வெளியறிவிட்டார்.

அதனைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக பேசப்படும் நபராக வலம் வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஹாட்டாப்பிக்காக பேசப்பட்டு வருபவர் அசல் கொலார். இன்டிபெண்டன்ட் இசையமைப்பாளராக பிக்பாஸ் வீட்டிற்கு வந்த அவர்,  அதிகமாக பெண்களிடம் மட்டுமே பேசி வருகிறார் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

publive-image
Bigg Boss 6

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்படியாவது லவ் பண்ணி வாழ்க்கை துணையடன்தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும் என்ற அசல் முடிவு செய்து உள்ளே வந்தது போல், அனைத்து பெண் போட்டியாளர்களிடமும் தனது காதல் வலையை வீசி வந்தார். இதில் தனலட்சுமி, குயின்சி மற்றும் ஜனனி ஆகியோர் அசலின் நோக்கம் தெரிந்து விலகிவிட்ட நிலையில, தற்போது சிங்கப்பூர் போட்டியாளர் நிவாஷினி அசல் வலையில் சிக்கியுள்ளார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

அதற்கு ஏற்றார்போல் அசலுடன் நெருங்கி பழகி வரும் நிவாஷினி அவரை மடியில் படுக்க வைப்பது சாப்பாடு ஊட்டி விடுவது உள்ளிட்ட பல செயல்க செய்து வருகிறார். மேலும் அசல் குறித்து ஆயிஷா நிவாஷினியிடம் சொன்னபோது கூட அவர் ஆயிஷாவை நாமினேட் செய்து அசலுடன் நெருக்கமான இருப்பதை உறுதி செய்துள்ளார். இதன் மூலம் பிக்பாஸ் சீசன் 6-ல்முதல் காதல் ஜோடி உருவாகிவிட்டது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

அதே சமயம் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இருக்கும் அசல் கொலார் குறைவான வாக்குகள் பெற்றுள்ளதால், வெளியேற்றப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அந்த வகையில் கொலார் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இருந்து வெளியேறிவிட்டால் நிவாஷினியின் நிலைமை என்னவாக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment